உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெண்கள் இரவில் தனியாக வெளியில் செல்லக்கூடாது; சொல்கிறார் மம்தா பானர்ஜி

பெண்கள் இரவில் தனியாக வெளியில் செல்லக்கூடாது; சொல்கிறார் மம்தா பானர்ஜி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கொல்கட்டா: பெண்கள் இரவில் வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது. அவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று கொல்கத்தா மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரத்தை முன்வைத்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசி உள்ளார்.மேற்கு வங்கம் துர்காபூரில் எம்பிபிஎஸ் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில், தொடர்புடையதாக கருதப்படும் 3 பேரை கைது செய்துள்ள போலீசார், தப்பியோடிய 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=p4xcqmcx&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0,இந்த பாலியல் பலாத்காரம் சம்பவத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாக கூறி முதல்வர் மம்தா பானர்ஜியின் நிர்வாகத்தையும் கண்டித்து கருத்துகளை வெளியிட்டு வந்தனர். ஆனால், பாலியல் பலாத்கார சம்பவத்தை பற்றி மவுனம் காத்து வந்த முதல்வர் மம்தா பானர்ஜி இன்று கொல்கத்தாவில் நிருபர்களிடம் பேசினார்.அப்போது அவர் கூறியதாவது; இது ஒரு தனியார் கல்லூரி.( மருத்துவ மாணவியின் கல்லூரியை குறிப்பிடுகிறார்). 3 வாரங்கள் முன்பு, ஒடிசாவில் கடற்கரையில் 3 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். ஒடிசா அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது? அந்த பெண்(பாதிக்கப்பட்ட மருத்துவ மாணவி) தனியார் மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டு இருக்கிறார். நள்ளிரவு 12.30 மணிக்கு அவள் எப்படி வெளியே வந்தார். எனக்கு தெரிந்தவரையில் இந்த பாலியல் பலாத்கார சம்பவம் காட்டுப்பகுதியில் நடந்திருக்கிறது. என்ன நடந்தது என்பது எனக்கு தெரியவில்லை. விசாரணை நடந்து வருகிறது. சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.தனியார் மருத்துவக் கல்லூரிகளும் தங்களின் மாணவர்களை குறிப்பாக பெண்களை கவனித்து கொள்ள வேண்டும். அவர்கள் இரவில் (கல்லூரிக்கு) வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது. அவர்கள் தங்களை பத்திரமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இங்கு வனப்பகுதி இருக்கிறது. அனைத்து மக்களையும் போலீசார் சோதனை செய்கிறார்கள். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள், யாரும் மன்னிக்கப்பட மாட்டார்கள். 3 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். நாங்கள் கடும் நடவடிக்கை எடுப்போம்.இதுபோன்ற சம்பவங்கள் மற்ற மாநிலங்களிலும் நடக்கிறது, அது கண்டிக்கத்தக்கது. மணிப்பூர், உ.பி.பீஹார், ஒடிசா ஆகிய மாநிலங்களிலும் நடந்துள்ளது. அங்குள்ள அரசாங்கங்கள் இவ்விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேற்கு வங்கத்தில் ஓரிரு மாதங்களில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துவிடுவோம். இவ்வாறு முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

VenuKopal, S
அக் 13, 2025 08:08

தன் மாநில குற்றங்களை மறைக்க அடுத்த மாநில விவரங்கள்...முதலில் உங்கள் குற்றங்களை களை எடுக்க நடவடிக்கை எடுங்கள். அதற்கு ஏன் இப்படி பம்முவது...இதுல பெங்கால் டைகர் ஆம்...


Ramesh Sargam
அக் 12, 2025 22:52

வேண்டுமென்றால் மம்தா துணைக்கு வருவார். துஷ்டனை கண்டால் தூர விலகு. மம்தாவை கண்டால் துஷ்டர்கள் தூர விலகுவார்கள்.


Chandhra Mouleeswaran MK
அக் 12, 2025 22:52

அக்காச்சியின் இந்த ஆணாதிக்க மனப்பான்மைக் கருத்திற்கு நகது பெண்னுருமி, பெண்மேளம், பெண் தாரை தப்பட்டைப் போராளிகளும் கூத்தாடிக் கூடாரப் போராளிகளும் கொதித்தெழ வேண்டாமா? "ஆய்யஹோ ஆம்மஹோ கும்பி எரியுது குடல் கருகுது பாஜகா ஆளும் மத்திய அரசே உனக்கு ஆட்சி ஒரு கேடா? ஆளும் மோடியே நீங்கள் தார்மீகப் பொறுப்பேற்றுப் பதவி விலக வேண்டும் அக்காச்சி பாவம் ஒரு பெண் அவளது ஆட்சியில் இப்படி நடக்க நீங்கள்தான் காரணம் மணிப்பூரி நடந்தால் அக்காச்சி பொங்கி எழுவார் தனது கட்சி ஆளும் மாநிலத்தில் இதெல்லாம் நடந்தால் அவர என்ன செய்வார் பாவம் அவர் ஒரு எளிய் பெண்தானெ?"


Indian
அக் 12, 2025 21:17

மத்திய அரசு கடுமையான சட்டங்களை இயற்ற வில்லை . அதன் இப்படி நடக்குது .


KR india
அக் 12, 2025 20:50

மிகவும் வருத்தமான நிகழ்வு தான். குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள். இங்கு சில வாசக அன்பர்கள், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் மீது குற்றம் சாட்டுகின்றனர். அது ஏற்புடையதல்ல கருத்து கூறும் போது, நியாய, தர்மம் பார்க்க வேண்டாமா ? மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் சரியாக தானே கூறி இருக்கிறார். இரவு 12.30 மணிக்கு அந்த மாணவி ஏன், விடுதி அறையை விட்டு வெளியே வந்தார் ? அந்த மாணவியின் பாதுகாப்பிற்கு தனியார் மருத்துவ கல்லூரி தான் பொறுப்பு. குறிப்பாக பெண்கள் இரவு நேரத்தில் வெளியே அனுமதிக்க கூடாது என்று மம்தா பானர்ஜி அவர்கள் கூறுவதும் சரிதான். தமிழகத்தில் கூட, கடந்த வருடம், கும்பகோணத்தில் உள்ள ஒரு வங்கிக்கு, வங்கி எழுத்து தேர்வில் பாஸ் செய்து, தேர்வாகி, வங்கியில் பணிபுரிய சேர்வதற்கு, வடமாநிலத்தில் இருந்து வந்த ஒரு பெண், கும்பகோணம் ரயில் நிலையத்தில், ரயில் தாமதமாக வந்த பின், நடு இரவில் தனியார் விடுதிக்கு செல்ல, ஆட்டோவில் சென்ற போது, இதே போன்ற சம்பவம் நடைபெற்றதாக செய்தி வந்தது நினைவிருக்கலாம். புதிய ஊருக்கு பணி நிமித்தமாக செல்லும் போது, பெண்கள், தகப்பனார் மற்றும் சகோதரர்கள் துணையுடன் செல்ல வேண்டும். ஒரு நாள் முன்னதாக, பகல் நேரத்திலேயே, விடுதியை அடைந்து விடுவது போன்று பயணத் திட்டத்தை வகுக்க வேண்டும். அடுத்த நாள், செல்ல வேண்டிய அலுவலக முகவரியை, முதல் நாளிலேயே, அலுவலகத்தின் Outer Area வரை சென்று பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். எந்த ஊராக இருப்பினும், தற்போதைய நாட்டு நடப்பில், ஆண்களுக்கே பாதுகாப்பில்லாத போது, 23 வயது இளம்பெண் இரவு 12:30 மணிக்கு, எங்கே, யாரை பார்க்க வெளியே சென்றார் என்று விசாரிக்க வேண்டும். விரைவில் குற்றவாளிகள் தண்டிக்கப் பட வேண்டும்.


என்றும் இந்தியன்
அக் 12, 2025 20:18

மம்தா பானர்ஜீ இப்படி சொல்வதாக எடுத்துக்கொள்ளலாம். உ.ம். ஒருவன் ஒருத்தியை பாலியல் துன்புறுத்தல் செய்தான். நீதிபதியின் தீர்ப்பு - "அவன் ஆண்குறி பெண்குறியிடம் பாலியல் செய்தது அவன் தவறு செய்யவில்லை அவன் ஆண்குறி தான் தவறு செய்தது.அவனுக்கு தண்டனை கொடுக்கமுடியாது அவனது ஆண்குறிக்குத்தான் தண்டனை கொடுக்கமுடியும். ஆனால் பெண்குறி அனுமதிக்காமல் ஆண்குறி தவறு செய்ய முடியாது. ஆகவே இது பெண்குறியின் தவறு ஆகவே ஆண்குறி உள்ள அந்த ஆணுக்கு தண்டனையில்லை"


தமிழ்வேள்
அக் 12, 2025 19:29

மஹ்மூதா பேகத்தின் கருத்து செயல்பாடு எல்லாம் குர்ஆன் & ஹதீஸ்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை.. போகோ ஹரம் கும்பலைக்கூட இந்த பேகம் நியாயப்படுத்தினாலும் வியப்பு இல்லை..


அப்பாவி
அக் 12, 2025 19:28

ஒண்ணும் வாணாம். புடிபட்ட அந்த அஞ்சு பேரையும் என்கவுண்ட்டரில் போட்டுத் தள்ளுங்க. ஹைதராபாதில் நடந்தது. இப்போ இதுமாதிரி குற்றங்கள் குறைஞ்சிருக்கு.


நிவேதா
அக் 12, 2025 20:53

என்கவுண்டர் செய்யும் போலீஸ் காரர்களின் சட்ட சிக்கல்களை பற்றி உங்களுக்கு தெரியவில்லை


Rathna
அக் 12, 2025 18:42

பங்களாதேஷிகளின் மொத்த இறக்குமதியில், பெண்கள் பகலிலேயே நடக்க முடியாத நிலைமை அங்கே பல மாவட்டங்களில் உள்ளது. பள்ளிக்கூடம் செல்லும் சிறு பெண் குழந்தைகள் கூட பாதிக்கப்படும் நிலைமை அங்கு உள்ளது.


K V Ramadoss
அக் 12, 2025 18:27

மற்ற மாநிலங்கள் என்றபோது, தமிழ் நாட்டையும் சேர்த்துக்கொண்டிருக்கலாமே..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை