உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நான் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியிருக்கக் கூடாது... புலம்பித் தவிக்கிறார் டிரம்ப்!

நான் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியிருக்கக் கூடாது... புலம்பித் தவிக்கிறார் டிரம்ப்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: 'கடந்த 2020ம் ஆண்டு தேர்தல் தோல்விக்குப் பிறகு வெள்ளை மாளிகைகையை விட்டு வெளியேறியிருக்கக் கூடாது' என்று அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வருத்தத்துடன் தெரிவித்தார்.உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை (நவ., 5) நடைபெறுகிறது. தேர்தலில், தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சி சார்பிலும், முன்னாள் அதிபர் டிரம்ப் குடியரசு கட்சி சார்பிலும் போட்டியிடுகின்றனர். இதனிடையே, பென்சில் வேனியா தேர்தல் பிரசாரத்தில் டிரம்ப் பேசியதாவது:கடந்த 2020ம் ஆண்டு தேர்தல் தோல்விக்குப் பிறகு வெள்ளை மாளிகைகையை விட்டு வெளியேறி இருக்கக் கூடாது. நான் வெளியேறிய அன்று நமது நாட்டின் எல்லை பாதுகாப்பாக இருந்தது. தேர்தல் நாளில் மக்களுக்கு சரியான நேரத்தில் உரையாற்றுவேன். ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் நிற்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.நாளை நடைபெறவுள்ள தேர்தலில் டொனால்டு டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. குறிப்பாக முக்கிய பகுதிகளில் ஓட்டுகளை மீண்டும் எண்ண வேண்டும் என்ற கோரிக்கைகள் இருந்தால், இறுதி முடிவு தெரிய பல நாட்கள் ஆகலாம் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

eskboomi9
நவ 05, 2024 06:47

எவன் ஜேயிச்சா நமக்கு என்ன ஒட்டு போடலைனா எனக்கு என்ன நான் சாப்பாட்டை கட்டிட்டு வேலைக்கு கிளம்புறேன்


T.S.Murali
நவ 04, 2024 15:26

ராகுலுக்கு ஆதரவு தருகிறோமோ இல்லையோ அனால் நிச்சியமாக மோடிக்கு கிடையாது .


Nallavan
நவ 04, 2024 14:24

குழந்தை தனமானது எந்த நாட்டிலும் நீங்கள் ஒட்டு போட்டு எவனும் வெற்றியடைய போவது இல்லை, உங்களுக்கு பெண்கள் தலைமையை ஏற்க மறுப்பவர்கள் அவர்களை கொத்தடிமைகளாக பார்ப்பவர்கள்


SP
நவ 04, 2024 11:42

இதில் புலம்பிதவிக்கிறார் என்று எங்கே வந்தது?


kulandai kannan
நவ 04, 2024 11:37

இந்தியாவில் ஒரு சர்வே நடத்தினால், 50 சதவீத பிராம்மணரின கமலாவைவிட, டிரம்பைத்தான் பெரும்பாலும் பிராம்மணர்கள் ஆதரிப்பார்கள். இதேபோல்தான் 25 சதவீத ராகுலைவிட மோடிக்கே அதிக ஆதரவு இருக்கும். நம் ஜாதிக்கு, நம் மொழிக்கு என்பதைவிட நம் நாட்டிற்கு எது நல்லது என்றாய்ந்து முடிவெடுப்பதே நன்மை பயக்கும்.


jayvee
நவ 04, 2024 11:05

வெளியேறியது தவறு என்று நினைப்பதே தவறு.. நம்ம ஊரில் mp யாக இல்லாமலே பலவருடங்கள் அரசு கொடுத்த பங்களாவை காலிசெய்யாமல் ஏமாற்றிய Antoio maino Ghandy ஞாபகம்தான் வருகிறது ..


xyzabc
நவ 04, 2024 10:26

This is a dangerous thought..


வைகுண்டேஸ்வரன்
நவ 04, 2024 10:11

அமெரிக்கர்கள் ஒருபோதும் ஒரு பெண்மணியை அதிபர் ஆக்க மாட்டார்கள். மேலும் கமலா ஹாரிஸ் சீப் பாலிடிக்ஸ் பண்ணிடிருக்கார்.


Rpalnivelu
நவ 04, 2024 09:54

டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியானால் உக்ரைன் போர் ஓயும். இஸ்ரேல் கை ஓங்கி ஈரானிய கொடுங்கோலல் ஆட்சியாளர்கள் ஒடுக்கப்பட்டு நல்லாட்சி நிலவ வழியேற்படும். சீனாவின் நில அபகரிப்பு நிற்கும்.


SUBBU,MADURAI
நவ 04, 2024 09:35

Chances of winning US Presidential Election. Trump: 57% chance Harris: 43% chance. Trump will win no doubt. (Based on polls


சமீபத்திய செய்தி