உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முதல்வருக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டுவது அவதூறு ஆகாது: கேரள ஐகோர்ட் அதிரடி

முதல்வருக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டுவது அவதூறு ஆகாது: கேரள ஐகோர்ட் அதிரடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: கறுப்புக் கொடி காட்டுவது சட்ட விரோதம் அல்ல. அது அவதூறு ஆகாது என கேரள ஐகோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது.கடந்த 2017 ம் ஆண்டு எர்ணாகுளம் மாவட்டம், பரவூர் பகுதியில் முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டியதாக 3 பேரை கேரள போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது அவதூறு , மக்கள் பணியில் உள்ளவர்களுக்கு இடையூறு செய்தல் உள்ளிட்ட ஐபிசி பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பரவூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.இதனை எதிர்த்து சம்பந்தப்பட்ட 3 பேரும் கேரள ஐகோர்ட்டில் முறையிட்டனர். இதனை விசாரித்த ஐகோர்ட் இன்று பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: ஒருவருக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டுவது அவதூறு கிடையாது. சட்ட விரோதமும் இல்லை. முதல்வரின் கான்வாய்க்கு எதிராக கறுப்புக் கொடி காட்டினாலும், அதனை அவதூறாக கருத முடியாது. ஒரு குறிப்பிட்ட நிறத்தில் கொடி காட்டப்பட்டாலும், அதற்கு என்ன விளக்கம் கூறப்பட்டாலும் கொடியை காட்டுவதற்கு தடை செய்ய சட்டத்தில் இடமில்லை. அதனால், அத்தகைய நடவடிக்கை அவதூறு குற்றமாக கருத முடியாது. இவ்வாறு ஐகோர்ட் உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
நவ 22, 2024 12:18

நாங்க எல்லாம் கோஷம் போட்டாலே இந்த காதில் வாங்கி அந்த காதில் வெளியே விட்டுட்டு போயிட்டே இருப்போம். கருப்பு கொடி காட்டினா என்ன பயந்துறுவோமா? அட போங்கய்யா. திமுக அதிமுக இவங்களோட சித்தப்பா பெரியப்பா பங்காளி கட்சிக கூட அவங்க கொடிலே கருப்பு கலர் வைச்சிருக்காங்க. அதுக்கு என்ன சொல்றீங்க.


சிவம்
நவ 21, 2024 23:35

ஒரு நீதிபதி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, அந்த நீதிபதி வெளியே வரும்போது, ஒருவர் கருப்பு கொடி காண்பித்து கேரோ செய்கிறார். காவல் துறை நீதிபதிக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டுமா இல்லையா? அதையும் தெளிவு படுத்த வேண்டும்


Ramesh Sargam
நவ 21, 2024 22:23

சரியான தீர்ப்பு. அழுகிய முட்டையை, அழுகின தக்காளியை வீசலாமா கோர்ட்டார் அவர்களே. அதையும் கூறிவிடுங்கள்.


ஆரூர் ரங்
நவ 21, 2024 22:20

கருப்புக் கொடி கறுப்புப் பணம், கருப்புச் சந்தை என்னவெல்லாம் கூறி அந்த ஸ்ரீகிருஷ்ணனின் வண்ணத்தையே தாழ்வாக நினைக்க வைக்கும் கலாச்சாரம் நம்முடையதல்ல. சேட்டன்மாருக்கு நல்ல புத்தியைக் கொடு என்டே குருவாயூரப்பா.


Anantharaman Srinivasan
நவ 21, 2024 22:18

இனி அடிக்கடி தொடரும். பிரதமர் நேருக்கு எதிராக கருப்பு கொடி காட்டப்பட்ட வரலாறு உள்ளது.


முக்கிய வீடியோ