உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரிமீயர் லீக் : 38 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி

பிரிமீயர் லீக் : 38 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆமதாபாத்: பிரிமீயர்லீக் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் 38 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி ஐதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றைய 51-வது போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் இருக்கும் குஜராத் அணியும், 9 வது இடத்தில் இருக்கும் ஐதராபாத் அணியும் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது.இதன்படி பேட்டிங் செய்த குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் ஜோடி நல்ல துவக்கம் அளித்தது. அதிரடியாக விளையாடிய சாய் சுதர்சன் 23 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து இருந்த போது ஜீஷன் அன்சாரி பந்தில் அவுட்டாகி அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.அடுத்து ஜோடி சேர்ந்த கில் மற்றும் ஜோஸ் பட்லர் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். சுப்மன் கில் 38 பந்துகளில் 76 ரன்கள் குவித்து ரன் அவுட்டானார். வாஷிங்டன் சுந்தர்6, ராகுல் திவாதியா 6, ரஷீத் கான் டக் அவுட் ஆக, குஜராத் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் அணியின் ஜெயதேவ் உனக்தத் அதிகபட்சமாக 3 விக்கெட் வீழ்த்தினார்.இதையடுத்து 225 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு களம் இறங்கிய ஜதராபாத் அணி துவக்க வீரர்களான டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா இருவரும் அதிரடியாக ஆடி ரன்களை குவித்த நிலையில் டிராவிஸ் ஹெ ட் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் 13 ரன்கள் எடுத்த நிலையில் இசான் கிஷன் அவுட்டானார். அடித்து ஆடிய அபிஷேக் சர்மா 74 ரன்களி்ல் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஹென்ரிஸ் கலாசன் 23 ரன்களிலும், அனிகேத் வர்மா 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.. கமிந்து மெண்டிஸ் ரன் எதுவும் எடுக்காமல் 6 வது விக்கெட்டாக வெளியேறினார். இறுதியில் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது ஐதராபாத் அணி.இதையடுத்து 38 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது.குஜராத் அணி சார்பில் முகமது சிராஜ் பிரதிஷ் கிருஷ்ணா தலா இரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி