வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இனி லஞ்சம் எப்படி வாங்கினாலும் மாட்டி கொள்வது என்பது உறுதியாகி விட்டது.மகிழ்ச்சி .
இதுக்கு எதுக்கு காக்கி சட்டையோட திரிகிறீங்க
மூணாறு:தொடுபுழாவில் 'செக்' மோசடி வழக்கில் கைதை தவிர்க்க 'கூகுள் பே' வாயிலாக ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ., அவரது ஏஜன்டை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.இடுக்கி மாவட்டம் தொடுபுழாவைச் சேர்ந்த பெண் ' செக்' மோசடி வழக்கில் சிக்கினார். அவர், வழக்கில் ஆஜராகாமல் காலம் கடத்தி வந்ததால் தொடுபுழா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பிடி வாரன்ட் பிறப்பித்தது. அதனால் கைது நடவடிக்கையை தடுப்பதற்கு வெளிநாட்டில் உள்ள சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவர், நண்பர் ஒருவர் மூலம் தொடுபுழா போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ., பிரதீப் ஜோஸை 48, அணுகினார். அவர், கைது நடவடிக்கையை தடுப்பதற்கு ரூ. 10 ஆயிரம் லஞ்சம் கேட்டார். அதனை அவரது ஏஜென்ட் ரஷீத் 43, என்பவரின் 'கூகுள் பே' கணக்கில் செலுத்துமாறு கூறினார். இது குறித்து சம்பந்தப்பட்ட பெண் இடுக்கி லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு தகவல் அளித்தார். அவர்கள் கூறிய அறிவுரை படி 'கூகுள் பே' வாயிலாக ரூ.10 ஆயிரம் கொடுக்கப்பட்டது. இடுக்கி லஞ்ச ஒழிப்பு துறைடி.எஸ்.பி. சாஜூஜோசப் தலைமையிலான போலீசார், எஸ்.ஐ., பிரதீப்ஜோசையும், ஏஜென்ட் ரஷீத்தையும் கைது செய்தனர்.
இனி லஞ்சம் எப்படி வாங்கினாலும் மாட்டி கொள்வது என்பது உறுதியாகி விட்டது.மகிழ்ச்சி .
இதுக்கு எதுக்கு காக்கி சட்டையோட திரிகிறீங்க