உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கர்நாடக தோத்தாபுரி மாம்பழத்துக்கு தடை ஆந்திர முதல்வருக்கு சித்தராமையா கடிதம்

கர்நாடக தோத்தாபுரி மாம்பழத்துக்கு தடை ஆந்திர முதல்வருக்கு சித்தராமையா கடிதம்

பெங்களூரு: கர்நாடகாவில் விளையும், 'தோத்தாபுரி' மாம்பழங்களுக்கு விதித்துள்ள தடையை நீக்கக்கோரி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு, கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதி உள்ளார்.ஆந்திர மாநிலம், சித்துாரில் தோத்தாபுரி ரக மாம்பழங்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இங்கு, 1 டன் தோத்தாபுரி மாம்பழங்கள், 30,000 ரூபாய்க்கு விற்பனையானது. கர்நாடகாவில் இருந்து சித்துாருக்கு தோத்தாபுரி மாம்பழங்கள் செல்ல துவங்கியது முதல், 1 டன் 12,000 ரூபாயாக சரிந்து விட்டது.இதையடுத்து, சித்துார் கலெக்டர், கர்நாடகாவில் இருந்து வரும் தோத்தாபுரி மாம்பழங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு, கர்நாடக முதல்வர் சித்தராமையா எழுதியுள்ள கடிதம்:மற்ற மாநிலங்களில் இருந்து வரும் தோத்தாபுரி மாம்பழங்களுக்கு, சித்துார் கலெக்டர், கடந்த 7ம் தேதி முதல் தடை விதித்திருப்பது கவலை அளிக்கிறது. இந்த உத்தரவை செயல்படுத்தும் வகையில், வருவாய், போலீஸ், வனம், சந்தைப்படுத்துதல் துறையை சேர்ந்த அதிகாரிகள் குழுவினர், கர்நாடக - தமிழக எல்லையில் சோதனை நடத்தி வருகின்றனர்.இந்த திடீர் முடிவு மற்றும் ஒருதலைபட்ச நடவடிக்கை, கர்நாடகாவில் உள்ள மாம்பழ விவசாயிகள், குறிப்பாக தோத்தாபுரி மாம்பழங்களை கணிசமாக பயிரிட்டுள்ளவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்த கட்டுப்பாட்டால், இரு மாநிலங்களுக்கு இடையே நடக்கும் வணிகம் சீர்குலைக்கிறது. ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் நேரடியாக பாதிக்கிறது.முன் ஆலோசனை, ஒருங்கிணைப்பு இல்லாமல் எடுக்கப்பட்ட இத்தகைய நடவடிக்கை, கூட்டாட்சி தத்துவத்துக்கு முரணானவை. இது பதற்றத்தையும், பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கும் வழிவகுக்கும் என்று கவலைப்படுகிறேன். இவ்விஷயத்தில் நீங்கள் தலையிட்டு, தடையை ரத்து செய்ய தேவையான உத்தரவுகளை, சித்துார் மாவட்ட அதிகாரிகளுக்கு பிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை