உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போர் வேண்டாம் என்ற சித்தராமையா பேட்டி: தலைப்பு செய்தியாக வெளியிட்ட பாகிஸ்தான் டிவி

போர் வேண்டாம் என்ற சித்தராமையா பேட்டி: தலைப்பு செய்தியாக வெளியிட்ட பாகிஸ்தான் டிவி

பெங்களூரு : 'பாகிஸ்தானுடன் போர் வேண்டாம்' என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியதை, பாகிஸ்தான், 'டிவி' சேனல் தலைப்பு செய்தியாக வெளியிட்டது. இதனால் கோபம் அடைந்த பா.ஜ., தலைவர்கள், 'சித்தராமையா, பாகிஸ்தான் செல்லட்டும்' என்று கண்டனம் தெரிவித்து உள்ளனர். ஜம்மு - காஷ்மீரில் சமீபத்தில் பாக்., பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், சுற்றுலா பயணியர் 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, இரு நாடுகளுக்கு இடையே போர் ஏற்படலாம் என்ற தகவல் பரவி வருகிறது.

ஆதரிக்கவில்லை

இது குறித்து கருத்து தெரிவித்த, காங்., கட்சியைச் சேர்ந்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, 'பாகிஸ்தான் மீது போர் அறிவிக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை; போரை நாங்கள் ஆதரிக்கவில்லை' என்றார். சித்தராமையாவின் இந்த கருத்தை, பாகிஸ்தானின் முன்னணி, 'டிவி' நிறுவனமான ஜியோ நியூஸ், சித்தராமையாவின் புகைப்படத்துடன் தலைப்பு செய்தியாக வெளியிட்டது. 'போருக்கு எதிராக இந்தியாவிற்குள் இருந்து வரும் குரல்' என்றும் செய்தி வாசித்தது.

இந்த வீடியோவை, பா.ஜ.,வைச் சேர்ந்த கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக், 'எக்ஸ்' வலைதளத்தில் வெளியிட்டு கூறியிருப்பதாவது:'பாகிஸ்தான் ரத்னா' முதல்வர் சித்தராமையா அவர்களே... உங்கள் குழந்தைத்தனம், அபத்தமான அறிக்கையால் ஒரே இரவில் பாகிஸ்தானில் உலக புகழ் பெற்று உள்ளீர்கள். உங்களுக்கு வாழ்த்துகள். நீங்கள் எப்போதாவது பாகிஸ்தான் சென்றால், உங்களுக்கு அந்த நாட்டின் அரச விருந்தோம்பல் உறுதி. பாகிஸ்தானுக்காக வாதிட்ட ஒரு சிறந்த அமைதி துாதராக பாகிஸ்தான் அரசு, அந்த நாட்டின் மிக உயர்ந்த சிவில் விருதான நிஷான் - இ - பாகிஸ்தான் விருதை வழங்கி கவுரவித்தாலும் ஆச்சரியப்பட எதுவும் இல்லை.'பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசும் முதல்வர் சித்தராமையா இந்தியாவை விட்டு வெளியேறி, பாகிஸ்தானுக்கு குடியேற வேண்டும்' என்று, பா.ஜ., தலைவர்கள் சிலர் விமர்சித்தனர்.இதையடுத்து, தன் பேச்சால் ஏற்பட்ட நெருக்கடியை உணர்ந்து, சித்தராமையா நேற்று அளித்த பேட்டியில், 'நாட்டின் அமைதி, பாதுகாப்பு, நல்லிணக்கம், இறையாண்மைக்கு அச்சுறுத்தல் விடுக்கும் யாராக இருந்தாலும், அவர்களை சும்மா விடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. 'பாகிஸ்தான் மீது போர் வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. தவிர்க்க முடியாத பட்சத்தில் மட்டுமே போர் நடக்கும் என்று தான் கூறினேன். எனது பேச்சை பா.ஜ., தலைவர்கள் திரித்து விட்டுள்ளனர்' என்றார்.

உளவுத்துறை தோல்வி

இதற்கிடையே, கர்நாடக மாநில கலால் துறை அமைச்சர் திம்மாபூர் பாகல்கோட்டில் நேற்று அளித்த பேட்டி: துப்பாக்கியால் சுடும் போது பயங்கரவாதிகள் மதத்தை கேட்டதாக கூறுகின்றனர். இது சாத்தியமா என்று தெரியவில்லை.மத்திய உளவுத்துறையின் தோல்வியை மறைக்க, இதுபோன்ற கதைகளை கட்டவிழ்த்து விடுகின்றனரா என்று தெரியவில்லை. அனைத்தையும் தேர்தல் கண்ணோட்டத்தில் பார்ப்பது சரியல்ல. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

ArGu
ஏப் 29, 2025 20:18

என் வீட்டு சோத்தை தின்று விட்டு என்வீட்டிற்கு திருடவருபவனுக்கு வாலை ஆட்டுகிறது இது


RAMESH
ஏப் 28, 2025 15:08

ஊழல் செய்த பணத்தை எல்லாம் அரசுக்கு கொடுத்து விட்டு பாகிஸ்தான் செல்லு..


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 28, 2025 15:05

பலியானது இருபத்தேழு பேர் .... இந்த அப்டேட் வந்து நாலு நாள் ஆச்சு ..... சரிபார்த்து திருத்திக்குங்க


மஞ்சுநாத்
ஏப் 28, 2025 13:32

அவர் வீட்டில் யாராவது இறந்து இருந்தால் இப்படி பேசுவாரா


பெரிய ராசு
ஏப் 28, 2025 12:55

காங்கிரஸ் மற்றும் திமுக நாட்டுக்கு வீட்டுக்கு கேடு அழித்தொழிக்கப்படவேண்டிய கட்சிகள்


Padmasridharan
ஏப் 28, 2025 12:39

மொழியும், மதமும்தான் மொதல்ல கேட்டு நட்புறவு செய்கிறார்கள்.. பின்பு என்ன மாதிரி வேலையென்று... மொழியை வெச்சிதானே அரசியலும் பண்றாங்க. காஷ்மீர்-பாகிஸ்தான் விஷயத்தில் தென்னிந்தியர்கள் வாயை மூடி வேலை செய்யவும். ராணுவத்தில் நிறைய பேர் வட இந்தியர்கள்தான். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு மட்டுமே அந்த வழி என்னவென்று தெரியும்.


Muralidharan S
ஏப் 28, 2025 11:24

பாகிஸ்தானுடன் சேர்ந்து கான்-கிராஸ்ஐயும் ஒழிக்கவேண்டும். உள்ளுக்குள் இருந்தே நாட்டை அரிக்கும் கரையான்கள் கான்-கிராஸ் ம், இன்டி கூட்டணிக்கட்சிகளும்.


VARUN
ஏப் 29, 2025 14:43

பிஜேபி இந்தியாவிலிருந்து எப்போது கலையப்படுகிறதோ அன்றுதான் இந்தியா நிஜமாக சுதந்திரமடையும் .


Rasheel
ஏப் 28, 2025 11:15

வட நாட்டில் என்ற ஹிந்து அரசன் ஜெய் சந்த் என்பவன் இருந்தான். அவன் ஹிந்து மக்களை நமது நாட்டின் மீது படையெடுத்து வந்த காட்டுமிராண்டிகளிடம் காட்டி கொடுத்தவன்.


ஆரூர் ரங்
ஏப் 28, 2025 10:54

விகிதத்துக்கு மேல் நான்கு உருது பேசும் முஸ்லிம்களுக்கு அமைச்சர் பதவியும் மட்டுமல்லாமல் சபாநாயகர் பதவியும் அளித்துள்ளார். அவர்களை சந்தோஷப்படுத்த வேண்டாமா?


Anand
ஏப் 28, 2025 10:34

பாகிஸ்தானுக்கு எதிராக போர் என்றால் சித்தராமையாவிற்கு ஏன் நோகுது? ஒரு வேலை அவரோட உடம்பில் ஓடுவது அந்த ரத்தமோ?


சமீபத்திய செய்தி