விஜயபுரா: ''அயோத்தி சென்று வந்த பின், முதல்வர் சித்தராமையா ராம பக்தன் ஆவார்,'' என்று, பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் கூறியுள்ளார்.விஜயபுராவில் நேற்று அவர் அளித்த பேட்டி:பட்கல் மசூதி, முதல்வர் சித்தராமையாவை பற்றி, அனந்தகுமார் ஹெக்டே என்ன கூறினார் என்று, எனக்கு தெரியாது. அவர் என்ன கூறினாலும், அதை பற்றி நான் கருத்து சொல்ல மாட்டேன். நாட்டில் ஹிந்து கோவில்கள் அழிக்கப்பட்டு, மசூதிகள் கட்டப்பட்டது உண்மை தான். பழங்கால கோவில்களில் இருந்த வைரத்தை கொள்ளையடித்து உள்ளனர்.பல போராட்டங்களால், அயோத்தியில் ராமர் கோவில் உருவாகி உள்ளது. மதுராவில் கிருஷ்ணர் கோவில் கட்டுவோம். விஜயபுரா மாவட்டத்தில் ஹிந்து கோவில்களை அழித்து, மசூதிகள் கட்டி உள்ளனர். இதுகுறித்து ஆய்வு செய்யும்படி, தொல்லியல் துறைக்கு, கடிதம் எழுதி உள்ளேன். ஆய்வு நடத்தாவிட்டால், நீதிமன்றம் செல்வேன். எதிர்பார்க்க முடியாது
பிரதமர் நரேந்திர மோடியில், முஸ்லிம் நாடுகளில் கூட, இந்தியாவின் மரியாதை அதிகரித்து உள்ளது. உலகத்தை ஹிந்து மதம் ஆளும் காலம், வெகுதொலைவில் இல்லை. அயோத்தி ராமர் கோவிலுக்கு, முதலில் செல்ல மாட்டேன் என்று, முதல்வர் சித்தராமையா கூறினார். ஆனால், தற்போது செல்வேன் என்கிறார்.அயோத்தி சென்று வந்த பின், ராம பக்தராக அவர் மாறுவார். எதிர்க்கட்சி தலைவர்களை தரக்குறைவாக பேசக் கூடாது என்று, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா எங்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர். பா.ஜ., கலாசாரத்தை பின்பற்றும் கட்சி. காங்கிரசிடம் இருந்து அதை எதிர்பார்க்க முடியாது. ஆக்கிரமிப்பு காஷ்மீர்
ராமர் கோவிலுக்கு செல்ல, சோனியாவிடம் அனுமதி கேட்க வேண்டும் என்று, காங்கிரசார் சொல்வது, அவர்களின் அடிமைத்தனத்தை காட்டுகிறது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது, பசுவதைக்கு தடை விதிக்க கோரி, டில்லியில் ஜைன முனிவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். அப்போது அவர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தினர். இதனால் முனிவர்கள், காந்தி குடும்பத்தை சபித்தனர்.இதன்விளைவாக இந்திரா, ராஜிவ் மரணம், ஒரே மாதிரி நடந்தது. ராகுலுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. முனிவர்கள் சாபத்தால், காங்கிரஸ் கட்சியும் அழியும். ராகுல் எவ்வளவு துாரம் நடந்தாலும், இனி காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்பு இல்லை.மோடியின் ஆட்சியில் பொருளாதாரத்தில், இந்தியா 5வது இடம் வந்துள்ளது. ஆக்கிரமிப்பு காஷ்மீரையும் நாங்கள் மீட்போம். இன்னும் 10 ஆண்டுகளில், பாகிஸ்தானும், இந்தியாவின் ஒரு பகுதியாக மாறும்.இவ்வாறு அவர் கூறினார்.