உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சீக்கியர் தலைப்பாகை குறித்து சர்ச்சை: ராகுலின் மனு தள்ளுபடி

சீக்கியர் தலைப்பாகை குறித்து சர்ச்சை: ராகுலின் மனு தள்ளுபடி

பிரயாக்ராஜ் : சீக்கியர் தலைப்பாகை குறித்து கருத்து தெரிவித்த வழக்கில், சீராய்வு மனுவை விசாரணைக்கு ஏற்ற வாரணாசி செஷன்ஸ் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் தாக்கல் செய்த மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்துக்கு கடந்த ஆண்டு சென்ற காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், அங்குள்ள இந்தியர்களுடன் கலந்துரையாடினார்.

கண்டனம்

அப்போது அவர், 'இந்தியாவில் ஒரு சீக்கியர் தலைப்பாகை அணிய அனுமதிக்கப்படுவாரா; 'கடா' எனப்படும், காப்பு அணிய அனுமதிக்கப்படுவாரா; குருத்வாரா செல்ல அனுமதிக்கப்படுவாரா என்பதற்காக போராட்டம் நடக்கிறது. இது சீக்கியர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து மதங்களுக்கும் பொருந்தும்' எனப் பேசினார். இது சர்ச்சையை ஏற் படுத்திய நிலையில், பா.ஜ., தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். வாரணாசியில் உள்ள எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில், கடந்தாண்டு நவம்பரில், நாகேஷ்வர் மிஸ்ரா என்பவர் ராகுலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். இதை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து, வாரணாசி செஷன்ஸ் நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை கடந்த ஜூலை 21ல், விசாரணைக்கு செஷன்ஸ் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

விசாரணை

இந்த உத்தரவை எதிர்த்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ராகுல் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம், கடந்த 3ல் தீர்ப்பை ஒத்தி வைத்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய அலகாபாத் உயர் நீதிமன்றம், ராகுலின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, வாரணாசி செஷன்ஸ் நீதிமன்றத்தில் சீராய்வு மனு மீதான விசாரணை விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Rathna
செப் 27, 2025 11:43

உலகம் முழுவதும் போய் தவறான வழியில் சம்பாதித்த பணத்தை இந்தியாவின் மத சுதந்திரம் பற்றி தவறாக பேசுவதுதான் இப்போது புது ஸ்டைல். ஆனால் இந்தியாவில் மெஜாரிட்டி தான் மைனாரிட்டி ஆக இருப்பது வேறு கதை. பாக்கிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தானில் மைனாரிட்டிகு நடக்கும் அநியாயத்திற்கு மட்டும் நவதுவாரத்தையும் மூடி கொண்டு இருப்போம். எதாவது பொய்யை சொல்லி ஆட்சிக்கு வரலாம் என்று பார்த்தால் வடநாட்டு காரன் எவனுமே வோட்டு போட மாட்டேங்கிறானே


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 27, 2025 08:25

அவரது மன ஆரோக்கியம் பற்றி யார்தான் கவலைப்படுகிறார்கள் >>>> அவர் அரசியலில் இருப்பது பாஜகவுக்கு அனுகூலம்தான் ..... ஆகவே எஞ்சியுள்ள நேரு குடும்ப உறுப்பினர்கள் மீதான வழக்குகள் நத்தை வேகம் ......


VENKATASUBRAMANIAN
செப் 27, 2025 08:21

சிலருக்கு புரியாது. இந்தியாவில் உள்ள சீக்கியர்களின் மத சம்பிரதாயங்களை பற்றி பேசி தூண்டி விடுகிறார். மற்ற மதங்களை சேர்த்து கொள்கிறார். தினமும் இந்தியாவில் மதகலவரங்கள் நடப்பது போல் பேசியுள்ளார். இதுதான் எதிர்கட்சி தலைவருக்கு அழகா. இந்தியன் என்ற உணர்வு கூட இல்லை.


Moorthy
செப் 27, 2025 07:32

நானும் பல முறை திரும்ப திரும்ப படித்தேன் , ராகுல் என்ன பேசினார் என்றே புரியவில்லை


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 27, 2025 08:24

கடந்த வருடம் வர்ஜீனியாவின் ஹெர்ன்டனில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, இந்தியாவில் ஒரு சீக்கியர் தலைப்பாகை அணிய அனுமதிக்கப் படுவாரா... ஒரு சீக்கியர் கடா அணிய அனுமதிக்கப் படுவாரா அல்லது குருத்வாராவிற்குச் செல்ல அனுமதிக்கப் படுவாரா என்பது பற்றியதுதான் சண்டை.


Kasimani Baskaran
செப் 27, 2025 06:38

ஆய்வு, சீராய்வு, தீர்ப்பு... அதற்குள் இராகுல்கு முடியெல்லாம் நரைத்து விட்டது... கோலூன்றி நடப்பதற்கு முன்னாவது தீர்ப்பு வந்தால் நல்லது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை