உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிந்து பகுதி இந்தியாவுக்கு சொந்தமாகலாம்: ராஜ்நாத் சிங் பேச்சு

சிந்து பகுதி இந்தியாவுக்கு சொந்தமாகலாம்: ராஜ்நாத் சிங் பேச்சு

புதுடில்லி: '' சிந்து பகுதி இன்று இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இல்லாமல் இருக்கலாம். யாருக்கு தெரியும், நாளை அது இந்தியாவுடன் இணையலாம்,'' என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

வலுக்கட்டாயம்

டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: பல ஆண்டுகளாக நமது அண்டை நாடுகளில் சிறுபான்மையினர் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களின் வீடு எரிக்கப்பட்டது. குழந்தைகள் கொல்லப்பட்டனர். மகள்களுக்கு தொந்தரவு கொடுக்கப்பட்டு சித்ரவதைக்கு உள்ளாகினர். மக்கள் வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7k6852eo&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சிலர் எப்படியோ அங்கிருந்து தப்பித்து, இந்தியாவுக்கு வந்துவிட்டனர். ஆனால், திருப்திபடுத்தும் அரசால், அவர்களுக்கு போதுமான சலுகைகள் வழங்கப்படவில்லை. குறிப்பிட்ட சமூகத்தின் ஓட்டு வங்கியை திருப்திபடுத்துவதற்காக அவர்கள் அவமானப்படுத்தப்பட்டனர்.

குடியுரிமை சட்டம்

ஆனால், அண்டை நாடுகளில் இருந்து வரும் ஒரு சிறப்பு வகுப்பினருக்கு அடைக்கலாம் வழங்கப்பட்டது. உண்மையிலேயே அதற்கு தகுதியான ஹிந்து சமூக மக்களுக்கு அவர்களுக்கு தகுதியான உரிமைகள் வழங்கப்படவில்லை. அவர்களின் துன்பங்கள் புரிந்து கொள்ளப்படவில்லை. ஆனால், அந்த வலியை யாராவது புரிந்து கொண்டனர் என்றால், அது பிரதமர் மோடி தான். அதனால் தான் குடியரிமை திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

நம்முடையவர்கள்

பாஜ மூத்த தலைவர் அத்வானியை பற்றி குறிப்பிட விரும்புகிறேன். சிந்து பகுதியைச் சேர்ந்த ஹிந்துக்கள், குறிப்பாக அவரது தலைமுறையைச் சேர்ந்தவர்கள், இந்தியாவில் இருந்து சிந்து பிரிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ளவில்லை என அத்வானி தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.சிந்துவில் மட்டும் அல்ல, இந்தியா முழுவதும் உள்ள ஹிந்துக்கள் சிந்து நதியை புனிதமாக கருதினர். இன்று சிந்து நிலம் இந்தியாவின் ஒரு பகுதியாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், நாகரீக ரீதியாக எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும். நிலத்தை பொறுத்தவரை எல்லைகள் மாறலாம். யாருக்கு தெரியும், சிந்து மீண்டும் இந்தியாவுக்கு திரும்பலாம். சிந்து நதியை புனிதமாக கருதும் சிந்து மக்கள் எப்போதும் நம்முடையவர்களாக இருப்பார்கள். அவர்கள் எங்கிருந்தாலும் நம்முடையவர்களாக இருப்பார்கள். இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

R. SUKUMAR CHEZHIAN
நவ 23, 2025 22:22

சிந்து பகுதி மும்பை மாகாணத்தின் ஒருபகுதியாக இருந்தது நம் நாடு துண்டாடுவதற்கு முன். நம் தேசதிற்கு இந்துஸ்தான் என பெயர் வர காரணம் சிந்து பகுதி தான் கூடியவிரைவில் நம் தேசதின் ஒரு பகுதியாக சிந்து மாரும் என எதிர்பார்க்கிறோம். நம் நாட்டின் ஜனதொகை அதிகரிப்பால் நாமும் அகண்ட பாரதம் பற்றி சிந்திக்க வேண்டும். அதேபோல் அமைதியை கெடுக்கும் ஜிகாதி கும்பல்களையும் கருவருக்க வேண்டும். ஜெய் ஹிந்த்.


Barakat Ali
நவ 23, 2025 21:23

அருணாச்சல பிரதேசத்தை இன்னமும் சீனா உரிமை கொண்டாடுகிறதே ????


V pravin
நவ 23, 2025 18:48

நம்முடைய பாரதம் சுதந்திரம் அடைந்தபோது வெள்ளையர்களுக்கு இந்தியாவைப் பிரிக்க அதிகாரமே இல்லை. அப்படி ஒருவேளை இந்தியாவை பிரித்தாலும் சிந்து மாகாணத்தையும் கிழக்கு பாகிஸ்தானையும் பிரிப்பதற்கு ஒருபோதும் அனுமதித்து கூடாது. ஏன் அவ்வாறு நமது முன்னோர்கள் ஒத்துக் கொண்டார்கள் என்பது எனக்கு மிகவும் ஆச்சரியமாக வேதனையுமாக உள்ளது. மேலும் 1971 இல் கிழக்கு பாகிஸ்தான் போர் நடந்த பொழுது பிரச்சனைக்குரிய கோழி கொண்டை பகுதி ஆவது நமது பாரதத்துடன் இணைத்து இருக்க வேண்டும் அது ஏன் அவ்வாறு நடக்கவில்லை என்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. அன்றைய கிழக்கு பாகிஸ்தான் இன்று பங்களாதேஷ் ஆகி இதுவரை நமது உடன் நட்பாக இருந்தது இப்போது அது மீண்டும் கிழக்கு பாகிஸ்தான் போல் ஆகி கொண்டு இருக்கிறது ஜெய்ஹிந்த்


சமீபத்திய செய்தி