உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி வந்தார் சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம்; சிகப்பு கம்பள வரவேற்பு

டில்லி வந்தார் சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம்; சிகப்பு கம்பள வரவேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியா வந்துள்ள சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னத்துக்கு, ஜனாதிபதி மாளிகையில் சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=fuak6lx0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரின் அதிபர் தர்மன் சண்முகரத்னம் அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருக்கு, ஜனாதிபதி மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய வெளி உறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் வரவேற்றனர். பிரதமர் மோடியை சிங்கப்பூர் அதிபர் தர்மன் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசிக்க உள்ளார். அப்போது முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.முன்னதாக, கடந்த 2015ம் ஆண்டு சிங்கப்பூரின் அப்போதைய அதிபர் டோனி டன் கிங் யாம், புதுடில்லிக்கு வருகைத் தந்தார். அதன் பின்னர் கடந்த 10 ஆண்டுகளில் சிங்கப்பூர் நாட்டின் அதிபர் இந்தியாவிற்கு வருவது இதுவே முதல்முறை.நம் அண்டை நாடான இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்னம், ஏற்கனவே சிங்கப்பூர் துணை பிரதமர், நிதியமைச்சர், கல்வி அமைச்சர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.வலுவான வணிக உறவுகள்!இது குறித்து சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முக ரத்னம் கூறியதாவது: சிறிய நாடான சிங்கப்பூர் மற்றும் மிகப்பெரிய நாடான இந்தியா இடையே உறவு வலுவாக இருக்கிறது. இந்தியாவிற்கும், சிங்கப்பூருக்கும் இடையிலான வணிக உறவுகள் செழித்து வருகின்றன. சிங்கப்பூர் பல ஆண்டுகளாக இந்தியாவில் மிகப்பெரிய முதலீட்டாளராக உள்ளது. இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

sankaran
ஜன 16, 2025 20:24

இலங்கை தமிழர் சிங்கப்பூரில் ப்ரெசிடெண்ட் ஆகலாம் ... ஆனால் சொந்த நாட்டில் ஆக முடியாது .. இலங்கை பிரச்சனைக்கு இதுதான் முக்கிய காரணம் .. இன்னமும் தீர்க்கப்படவில்லை ... பல உயிர்களை பலி கொடுத்த பின்னும்..


Kasimani Baskaran
ஜன 16, 2025 13:28

சிங்கப்பூர் இந்திய உறவு மேம்பட பிரார்த்திப்போம்.


Raj
ஜன 16, 2025 13:04

யாரங்கே திராவிட மன்னர் மற்றும் இளவரசரை சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள்


sankaranarayanan
ஜன 16, 2025 12:15

சிங்கப்புர் அதிபர் திராவிட மாடல் அரசை சந்திக்க விருப்பமே இல்லையாம் பிறகு அவரது அரசியல் வாழ்வே சந்தி சிரித்துவிடுமாம்


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜன 16, 2025 11:36

யாரங்கே? திராவிட மன்னரை சந்திக்க விண்ணப்பம் வந்துவிட்டதா? இம்சை இளவரசரை தயாராகச் சொல்லுங்கள்.


சமீபத்திய செய்தி