உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு (SIR) கை மேல் பலன்; சொந்த நாட்டுக்கு தப்பியோடும் வங்கதேச ஊடுருவல்காரர்கள்

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு (SIR) கை மேல் பலன்; சொந்த நாட்டுக்கு தப்பியோடும் வங்கதேச ஊடுருவல்காரர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மத்திய அரசின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் காரணமாக மேற்கு வங்கத்தில் சட்ட விரோதமாக குடியிருந்த வங்கதேசத்தினர் சொந்த நாட்டுக்குச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை மத்திய அரசு வேகமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. இதன் முக்கிய நோக்கமே, ஒருவரே பல இடங்களில் ஓட்டு போடுவதை தடுப்பதோடு, உண்மையான வாக்காளர்கள் யார் என்பதை அடையாளம் காணும் பணியாகும்.பீஹாரைத் தொடர்ந்து தற்போது கேரளா, தமிழகம், மேற்கு வங்கம் என மொத்தம் 10 மாநிலங்கள், கோவா., புதுச்சேரி ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற எஸ்ஐஆர் பணிகளை மத்திய அரசு மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. இன்று அசாமிலும் எஸ்ஐஆர் பணிகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.இந் நிலையில், மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆர் பணிகள் தொடங்கியதன் முக்கிய பலனை பார்க்க முடிகிறது. அங்கு வீடு, வீடாக எஸ்ஐஆர் கணக்கீட்டு விண்ணப்ப படிவங்களை வினியோகித்து, பூர்த்தி செய்து அவற்றை திரும்ப பெறும் பணிகளில் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதன் எதிரொலியாக, அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து மேற்கு வங்கத்திற்குள் சட்ட விரோதமாக ஊருடுவி உள்ள ஏராளமானோர் தற்போது சொந்த நாடு நோக்கி நகர ஆரம்பித்துள்ளனர்.மேற்கு வங்கத்தில் இருந்து குடும்பம், குடும்பமாக அவர்கள் உடமைகளுடன், சொந்த நாட்டுக்கு புறப்படும் காட்சிகளை பிரபல ஆங்கில செய்தித் தொலைக்காட்சியான ரிபப்ளிக் டிவி வெளிச்சம் போட்டு காட்டி உள்ளது. இன்று எஸ்ஐஆர் பற்றி, விவாத மேடை நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டது.இதில் பேசிய ரிபப்ளிக் செய்தி தொலைக்காட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி, எஸ்ஐஆர் நடவடிக்கையால் மக்களின் ஓட்டுரிமை காக்கப்படுகிறது என்பதை கள ஆய்வில் கண்டறிந்ததாக கூறினார்.அதை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில், தங்கள் தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர் பதிவு செய்த பேட்டிகளை வெளியிட்டார். சட்ட விரோதமாக கோல்கட்டாவில் தங்கி இருந்து, தற்போது எஸ்ஐஆரால் சிக்கிக் கொள்வோம் என்பதால் சொந்த நாடான வங்கதேசத்திற்கு நூற்றுக்கணக்கானோர் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் மூட்டை முடிச்சுகளுடன் புறப்படுவதை அறிந்து ரிபப்ளிக் செய்தியாளர் பிரத்யேகமாக பேட்டி எடுத்துள்ளார். அதில் பேசியவர்கள் கூறியதாவது; நாங்கள் வங்கதேசத்தில் இருந்து கோல்கட்டாவில் சட்ட விரோதமாக ஊடுருவினோம். எங்களிடம் எந்த ஆவணங்களும் இல்லை. நாங்கள் இங்கு பாஸ்போர்ட் எடுத்து முறைப்படி வரவில்லை. புரோக்கர் மூலமாக 5 ஆயிரம் ரூபாய் முதல் 7 ஆயிரம் வரை பணம் கொடுத்து வந்தோம்.2 ஆண்டுகளாக இங்கே இருக்கிறோம். இப்போது இங்கே (மேற்கு வங்கத்தை குறிப்பிடுகிறார்) எஸ்ஐஆர் பணிகளை தொடங்கி இருக்கிறார்கள். எங்களிடம் எந்த முறையான குடியுரிமையோ ஆவணங்களோ இல்லை.ஆகையால் சொந்த நாட்டுக்குச் செல்கிறோம். எங்களுக்கு இங்கே உள்ள அரசாங்கம் உதவி புரிகிறது. எல்லைகளை திறந்துவிட்டுள்ளது. பாதுகாப்பாக செல்ல வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. கைவசம் உள்ள இந்திய பணத்தை செலவிடுவோம். வேறு என்ன செய்வது? இவ்வாறு அந்த பேட்டியில் உரையாடல் பதிவாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Priyan Vadanad
நவ 17, 2025 23:28

ரிப்பப்ளிக் டீவியை பற்றியும் அர்னாப் கோஸ்வாமி பற்றியும் பலருக்கும் தெரியுமாதலால் இவர்கள் தரும் செய்திகளை பலர் முழுமையானது என்று நம்ப மாட்டார்கள்.


Iyer
நவ 17, 2025 23:27

SIR ஆல் ""ஆயிரக்கணக்கான"" பங்களாதேசிகள் நாட்டை விட்டே ஓடிக்கொண்டிருப்பது நல்ல செய்திதான் ஆனால் நினைவில் கொள்ளவேண்டியது என்னவென்றால் ""6 கோடி"" கள்ளகுடியேறிகள் நாட்டில் உள்ளனர் இவர்கள் எல்லாம் அடையாளம் கண்டு, VOTERLIST ல் இருந்து நீக்கினால் மட்டும் போதாது - அவர்களை நாடு கடத்தவேண்டும். இதில் ஏற்கனவே மம்தா அரசு பல லக்ஷம் பேருக்கு - AADHAR, VOTERID , BIRTHCERTIFICATE , SCHOOLCERTIFICATE கள்ளத்தனமாக வழங்கியுள்ளது அவர்களை எப்படி VOTER LIST ல் இருந்து நீக்க முடியும்?


ஈசன்
நவ 17, 2025 23:12

இந்த செய்தி முகநூல் whatsapp இல் வலம் வருகிறது. தினமலரில் வெளியாகும்போதுதான் நம்பிக்கை வருகிறது. நல்ல செய்தி. மற்ற மாநிலங்களில் என்ன நிலைமை என்பதையும் வெளியிடுங்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை