உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வயநாட்டில் பாலம் கட்டும் பணியில் பெண் அதிகாரி சீதா

வயநாட்டில் பாலம் கட்டும் பணியில் பெண் அதிகாரி சீதா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வயநாடு: வயநாட்டில், சூரல்மலை - முண்டக்கை பகுதிகளை இணைக்கும் வகையில் இருந்த பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால், கிராமங்கள் துண்டிக்கப்பட்டன; மீட்புப் பணிகளிலும் தொய்வு ஏற்பட்டது.இந்நிலையில், இரு கிராமங்களை இணைக்கும் வகையிலும், மீட்புப் பணிகளை துரிதப்படுத்தவும், நம் ராணுவத்தினர் பெய்லி பாலத்தை அமைத்தனர். 190 அடி உடைய இந்த பாலத்தை, இடைவேளையின்றி, 31 மணி நேரத்தில் ராணுவத்தினர் கட்டி முடித்தனர். 3 மீட்டர் அகலமுடைய இந்த பாலத்தில், 24 டன் எடையை ஏற்றிச் செல்லலாம். கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள மெட்ராஸ் இன்ஜினியர் குரூப் பிரிவைச் சேர்ந்த, 144 பேர் அடங்கிய குழுவினர், பெய்லி பாலத்தை கட்டினர். இக்குழுவில், சீதா அசோக் ஷெல்கே என்ற பெண் அதிகாரி, பாலம் கட்டும் பணியை முன்னின்று நடத்தினார். இது தவிர, நேற்று முன்தினம் அதிகாலை 3:00 மணியளவில், பெய்லி பாலத்திற்கு இணையாக, மற்றொரு 100 அடி நடைபாலத்தை, மூன்று மணி நேரத்தில் ராணுவத்தினர் கட்டி முடித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

RAMAMOORTHY GOVI
ஆக 03, 2024 19:24

மனமார்ந்த வாழ்த்துக்கள்


Svs Yaadum oore
ஆக 03, 2024 13:19

ஜாதி, மதம், இனம், மொழி எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவர்கள் என்று அடுத்தவனுக்கு உபதேசம் செய்வதற்கு முன்னால் தன் முதுகில் உள்ள அழுக்கை முதலில் பார்க்கட்டும் ......வடக்கன் என்றால் படிக்காதவன் பனி பூரி என்று விடியல் மந்திரி சொல்ல காரணம் என்ன?? ....அவர்கிட்ட இந்த உபதேசம் செய்ய வேண்டியதுதானே ...


Balasubramanian
ஆக 03, 2024 11:49

போட்டோ எடுத்து போடுங்க! கல் வெட்டில் பதிவு பண்ணுங்க! ராமர் எப்போ பாலம் கட்டினார்? என்று கேட்டவர்கள் சீதா எப்போது பாலம் கட்டினார் என்றும் கேட்க கூடும்!


Apposthalan samlin
ஆக 03, 2024 11:26

ராணுவத்தில் CREF என்ற ஒரு பிரிவு சுதந்திரத்திற்கு பின்னர் உருவாக்க பட்டது central reserve engineering force .போர் நேரத்தில் இவர்களின் வேலை பாலம் கட்டுவது தான்.எப்பொழுதும் இவர்கள் ராணுவத்துடன் இணைந்து இருபார்கள் பேரிடர் காலங்களில் இவர்களுக்கு வேலை அதிகமாக இருக்கும் மற்ற நேரம் வேலை இருக்காது வாழ்த்துக்கள் . இதில் கொத்தனார்கள் அதிகம் உண்டு இவர்கள் எல்லோரும் மலை பிரதேசத்தில் வேலையில் இருப்பார்கள் இரும்பு ballankalai பராமரிப்பு செய்வதும் இவர்களே


k Venkatesan
ஆக 03, 2024 11:06

ராணுவ வீரர்கள் ஜாதி, மதம், இனம், மொழி எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவர்கள். தம்மை இந்தியனாக கருதுகிறவர்கள். உங்கள் அரசியலை இவர்களிடம் புகுத்தாதீர்கள். மேலும் இந்த bailey பிரிட்ஜ் construct பண்ணியது MADRAS ENGINEERING GROUP MEG இல் உள்ள வீரர்கள். இங்கு உள்ள பெரும்பான்மையானவர்கள் தமிழர்கள். soldiers from ANDHRA, KERALA, TELUNGANA, KARNATAKA ARE ALSO WORKING. A SMALL PERCENTAGE OF SOLDIERS OF HARIYANA, WEST BENGAL, BIHAR, MP, UP ARE ALSO WORKING. THOUGh the commanding language is HINDI, 100% soldiers of MEG including நொர்தேர்ன் ஸ்டேட் officers speak TAMIL fluently. Tamil and Malayalam played key role during Indo-Pak war because PAK could not decode the language even after receiving the wireless communication. Madras Regimental Centre Infantry Unit in Wellington is also similar in soldiers composition with different role.


P VIJAYAKUMAR
ஆக 03, 2024 10:44

Dedicated work to nation... Great salute to her.


ஆரூர் ரங்
ஆக 03, 2024 09:30

சீதையை காப்பாற்ற பாலம் அமைத்தது இதிகாச காலம். சீதையே பாலம் கட்டுவது இக்காலம் . சீதையைப் போற்றுவோம்.


Svs Yaadum oore
ஆக 03, 2024 08:33

வடக்கன் என்றால் படிக்காதவன் பஞ்சம் பிழைக்க வந்தவன் என்று கேவலமாக பேசுவான் ..பெயிலி பாலம் மட்டும் விடியலுக்கு மத சார்பின்மையாக இனிக்குதா ?? .....விடியல் என்னமோ உழைத்து சம்பாதித்த வரிப்பணத்தை வடக்கன் எடுத்துக்கொண்டு போவது போல தவறான தகவல் பரவ செய்வது .......இங்குள்ள ரேஷன் பொருட்கள் அனைத்தும் வடக்கன் மாநிலத்திலிருந்து வருவது ....அதற்கு GST கிடையாது ....இப்பொது உச்ச நீதி மன்றம் கனிம பொருட்களுக்கு மாநிலங்கள் வரி விதிக்கலாம் என்று உத்தரவு .....ஒரிசா சட்டிஸ்கர் மாநிலங்கள் கனிமங்களுக்கு வரி விதித்தால் விடியல் ஒரே நாளில் திவாலாகி விடிந்து விடும் ...


VENKATASUBRAMANIAN
ஆக 03, 2024 08:25

இவரை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள். சினிமா டிவிட்டர் பின்னால் போவதை விட்டு ஆக்கப்பூர்வமாக கற்றுக்கொள்ளுங்கள்.


RAJ
ஆக 03, 2024 07:56

என் கடன் பணி செய்து கிடப்பதே.- வாழ்க இந்திய ராணுவம் - ஜெய்ஹிந்த் ..


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை