உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமெரிக்கா பயணம்:தனிப்பட்ட பயணம் என்கிறார் சிவகுமார்

அமெரிக்கா பயணம்:தனிப்பட்ட பயணம் என்கிறார் சிவகுமார்

பெங்களூரு: கர்நாடக துணை முதல்வரான சிவகுமார் அமெரிக்காவிற்கு செல்ல உள்ளதாகவும், அங்கு தலைவர்கள் யாரையும் சந்திக்க வில்லை எனவும் கூறி உள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது: எனது குடும்பத்தாருடன் வெளிநாட்டு பயணமாக வாஷிங்டன் நகருக்கு செல்கிறேன். வரும் 15 ம் தேதி வரையில் அமெரிக்காவில் இருப்பேன். பத்திரிகையாளர்கள் கூறுவது போன்று பராக் ஓபாமா மற்றும் கமலா ஹாரிசை சந்திக்க வில்லை . இது எனது தனிப்பட்ட பயணம் என்றார். தொடர்ந்து இது சம்பந்தமாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு எழுதி உள்ள கடிதத்தையும் அவர் வெளியிட்டார். முன்னதாக காங்., தலைவர் ராகுல் மூன்று நாளாக டெக்ஸாஸ்-க்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு சென்றுள்ள ராகுல் டெக்ஸாஸ் பல்கலையில் உரையாற்றுகிறார். மேலும் வாஷிங்டன், டல்லாஸ் நகரங்களுக்கும் ராகுல் பயணி்க்க உள்ளார். இதனிடையே இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா கூறுகையில், ராகுலின் அமெரிக்கப் பயணம் அவரது உத்தியோகபூர்வ பயணம் இல்லை, மாறாக 'தனிப்பட்ட அளவில்' உள்ளது. என்று கூறி உள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Ethiraj
செப் 09, 2024 08:20

He is right entire world is ready to invest in India. Cheap highly qualified youth are available in our country in abundance Our citizens are ready to work 48 to 72 hours a week non stop We need not go with a bowl for investment.


நிக்கோல்தாம்சன்
செப் 09, 2024 06:18

அதுவும் எதிர்க்கட்சிகள் எல்லாம் திடீரென அமேரிக்கா செல்வதும் , அவர்களின் பயணம் இந்தியாவை முதுகில் குத்தும் பயணமாக இருக்க கூடாது என்றும் நம்புகிறேன்


Kasimani Baskaran
செப் 09, 2024 05:35

அரசியல் வாதிகள் தக்க அனுமதி பெற்று அதன்பின்னர்தான் செல்ல முடியும். ஒன்று சேருவதைப்பார்த்தால் ஏதோ சதித்திட்டம் போல தெரிகிறது. எதற்கும் இவர்களை கவனிப்பது நல்லது.


Rajagopalan R
செப் 09, 2024 00:57

இவருக்கு இன்வெஸ்ட்மெண்ட்ஸ் வேண்டாமா ?


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 08, 2024 23:40

இப்பல்லாம் அமெரிக்க முதலீடு கூரையைப் பிச்சுக்கினு லாபம் கொடுக்குது போலிருக்கே ..... வாளுக திராவிட மாடல் .....


Natarajan Ramanathan
செப் 08, 2024 23:11

ரவுல் வின்சி உத்தியோகபூர்வ பயணம் என்றால் பட்டாயாவுக்குத்தான் செல்வான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை