உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சத்தீஸ்கரில் நக்சல்கள் ஆறு பேர் சுட்டுக்கொலை: பாதுகாப்புப் படையினர் அதிரடி

சத்தீஸ்கரில் நக்சல்கள் ஆறு பேர் சுட்டுக்கொலை: பாதுகாப்புப் படையினர் அதிரடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பிஜாப்பூர்: சத்தீஸ்கரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப்படையினருடன் நடந்த மோதலில் நக்சல்கள் ஆறு பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.பிஜாப்பூர் மாவட்டத்தில் இந்திராவதி தேசிய பூங்கா பகுதியில், நக்சல்கள் நடமாட்டம் குறித்து பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து டிஆர்ஜி படையினர், சிறப்பு அதிரடிப்படையினர் அடங்கிய குழுவினர் அங்கு விரைந்தனர். அப்போது இரு தரப்புக்கு இடையே கடுமையான துப்பாக்கிச்சண்டை நடந்தது. இந்தமோதலில் நக்சல்கள் ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் பதுங்கியிருக்கும் மற்ற நக்சல்கள் தப்பிச் செல்ல முடியாதபடி சிர்பிஎப், மாநில ஆயுதப்படைகள் அந்தப் பகுதியை சுற்றி வளைத்துள்ளனர்.பிஜாப்பூரின் தர்லாகுடா பகுதியில் நடந்த மற்றொரு என்கவுன்டரில் ஒரு நக்சல் காயமடைந்தார்.நக்சல்களை சுட்டுக் கொன்ற பாதுகாப்புப்படையினருக்கு முதல்வர் விஷ்ணு தியோ சாய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

259 பேர் பலி

இந்தாண்டு மட்டும், இதுவரை பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் 259 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.பஸ்டர் டிவிஷனில் மட்டும் 230 பேரும், காரியாபந்த் மாவட்டத்தில் 27 பேரும், கொல்லப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Thravisham
நவ 11, 2025 22:06

திருட்டு த்ரவிஷ கூட்டத்தை தூக்குவது எப்போது?


RAMESH KUMAR R V
நவ 11, 2025 21:02

பயங்கரவாதத்தையும் துடைத்தெறிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


புதிய வீடியோ