உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தூங்கிக் கொண்டிருந்த விவசாயி கழுத்தை நெரித்துக் கொலை

தூங்கிக் கொண்டிருந்த விவசாயி கழுத்தை நெரித்துக் கொலை

பரேலி:உத்தரப் பிரதேசத்தில், 62 வயது விவசாயி தூங்கிக் கொண்டிருந்தபோது, கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டார்.உ.பி., மாநிலம், பரேலி மாவட்டம் சிரோலி அருகே ஜகன்னாத்பூர் கிராமத்தில் வசித்தவர் ஞானிபிரசாத்,62. விவசாயி. நேற்று முன் தினம் இரவு, வீட்டு வராண்டாவிலேயே தூங்கினார். நேற்று அதிகாலை 2:30 மணிக்கு வந்த சிலர், பிரசாத்தை கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டு தப்பினர். இதுகுறித்து பரேலி மாவட்ட கூடுதல் எஸ்.பி., முகேஷ் சந்திர மிஸ்ரா கூறியதாவது: தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். வீட்டு வராண்டாவில் கிடந்த ஞானி பிரசாத் உடலில் வாய் மற்றும் மூக்கில் இருந்து ரத்தம் வெளியேறி உறைந்து இருந்தது. உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளோம். அவர் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்தும், குற்றவாளிகள் பற்றியும் விசாரணை நடக்கிறது. அவரது குடும்பத்தினர் புகார் கொடுத்தவுடன் வழக்குப் பதிவு செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.ஞானி சகோதரர் நெக்பால், “பிரசாத்துக்கு யாருடனும் விரோதம் இல்லை. அவரை யார் இப்படி கொடூரமாக கொலை செய்தனர் என தெரியவில்லை. உடற்கூறு ஆய்வு அறிக்கை வந்தவுடன் புகார் மனு கொடுப்போம்,”என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை