உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மருத்துவமனையில் எஸ்.எம்.கிருஷ்ணா

மருத்துவமனையில் எஸ்.எம்.கிருஷ்ணா

பெங்களூரு: பா.ஜ., மூத்த தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணா, உடல் நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.முன்னாள் முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான எஸ்.எம்.கிருஷ்ணா, 92, மூச்சுத்திணறல் பிரச்னையால் அவதிப்பட்டு, நடப்பாண்டு ஜூலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒரு மாதம் சிகிச்சைக்கு பின், குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.நேற்று காலை, அவரது உடல் நிலை திடீரென பாதிக்கப்பட்டது. பெங்களூரின் பழைய விமான நிலையம் சாலையில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. குணமடைந்து வருவதால், நாளை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படலாம்.துணை முதல்வர் சிவகுமார், மருத்துவமனைக்கு சென்று, கிருஷ்ணாவிடம் நலம் விசாரித்தார்.உடல் நிலை பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாநிலத்தின் மூத்த அரசியல் தலைவர் கிருஷ்ணா, விரைவில் குணமடைய வேண்டும். தன் அன்றாட பணிகளை கவனிக்க வேண்டும் என, பிரார்த்திக்கிறேன்.- பி.ஒய்.விஜயேந்திரா,மாநில தலைவர், பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ