உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காதலனுடன் நடப்பதாக இருந்த திருமணம் ரத்து: அறிவித்தார் கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா

காதலனுடன் நடப்பதாக இருந்த திருமணம் ரத்து: அறிவித்தார் கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: இசையமைப்பாளர் பலாஷ் முச்சல் உடன் நடப்பதாக இருந்த கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.பிரபல கிரிக்கெட் வீராங்கனையும், இந்திய அணி துணை கேப்டனுமான ஸ்மிருதி மந்தனா, இசையமைப்பாளர் பலாஷ் முச்சல் ஆகியோர் காதலித்தனர். இருவருக்கும் பெற்றோர் ஒப்புதலுடன் திருமணம் நடப்பதாக இருந்தது.இதற்கென இரு வீட்டார் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தமும் நடந்தது. திருமணம் நடப்பதாக இருந்த நவ.,23 அன்று மந்தனாவின் தந்தைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் திருமணம் தள்ளி வைக்கப்படுவதாக அறிவித்தனர்.இதை தொடர்ந்து, மணமகன் பற்றிய பல விதமான தகவல்கள் உலா வரத் தொடங்கின. அவருக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதாகவும், அதை அறிந்த பிறகே திருமணம் நிறுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.மந்தனா, தன் திருமண நிச்சயதார்த்த படங்கள், காதலனுடன் இருக்கும் படங்களை தன் சமூக வலைதள பக்கங்களில் இருந்து நீக்கினார். இதனால் திருமணம் நடக்குமா என்று சந்தேகம் எழுந்தது.இந்நிலையில், திருமண விழா நடக்காது என்று மந்தனா அறிவித்துள்ளார். அவரது அறிக்கை:கடந்த சில வாரங்களாக என் வாழ்க்கை தொடர்பாக பல்வேறு யூகங்கள் வெளியாகி வருகின்றன. நடப்பதாக இருந்த எனது திருமணம் ரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. எங்களது குடும்பத்தினரின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Arul Narayanan
டிச 08, 2025 05:31

நீண்ட காலமாக காதலித்து கொண்டு இருந்தால் இப்படியும் ஆகலாம். பலருக்கும் இது ஒரு எச்சரிக்கை செய்தியாக இருக்கலாம். ஒரு துறையில் சிறப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்து தேவைப்படும் போது பெற்றோர் மூலம் ஏற்பாடு செய்யப் பட்ட குடும்ப பந்தத்தில் ஈடுபடுவதே சாலச் சிறந்தது என்பதே இதன் மூலம் விடுக்கப் படும் செய்தியாக இருக்கும்.


Dinesh babu
டிச 07, 2025 22:36

ஒருவருடைய தனிப்பட்ட வாழ்கை , எதற்கு செய்தி . அவர்கள் வாழ்க்கை அவர்கள் விருப்பம் .


V.Mohan
டிச 07, 2025 19:02

நாடு பாதிக்கப்பட்டதா என்று மனிதர் கேட்கிறார்??. தயவு செய்து இதே கேள்வியை உங்கள் கூட்டணி சொம்புகளிடம் கேளுங்க, எதற்கு தெரியுமா?.திருப்பரங்குன்றம் மலை மீது தீபத்தூணில் தீபம் ஏற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதனால், அந்த தீபம் ஏற்ற சென்ற ஆன்மீக வாதிகளால், """எந்த விதத்தால் நாடு பாதிப்படைந்தது"" என்பதை சொல்ல இயலுமா???? சும்மா வேற செய்திகள் பற்றி கருத்து சொல்வதாக ஜல்லியடிக்காதீர்கள்.


Rameshmoorthy
டிச 07, 2025 16:58

Please concentrate on your game and family, you will for sure come out from this situation, God bless


Prathab
டிச 07, 2025 14:58

செய்திகள் நாம் நினைப்பது போல் இருக்க முடியாது, ஆனால் அது எதுவாகவும் எல்லாமாகவும் இருக்கலாம்.


ديفيد رافائيل
டிச 07, 2025 14:37

நான் தெரியாம கேட்கின்றேன். இது நாட்டுக்கு ரொம்ப ரொம்ப முக்கியமான news தானா சொல்லுங்க. இதனால நாடு ஏதாவது பாதிக்கப்பட்டதா?


Venkatesan Ramasamay
டிச 07, 2025 14:41

இன்னொரு ஜென்மம் இருந்தா அப்போது பொறப்போம் ஒண்ணோடு ஒண்ணா கலந்து அப்போது இருப்போம் அது கூடாமப் போச்சுதுன்னா என் ராசாவே நான் வெண் மேகமாக விடிவெள்ளியாக வானத்தில் பிறந்திருப்பேன் என்னை அடையாளம் கண்டு நீ தேடி வந்தா அப்போது நான் சிரிப்பேன்


V K
டிச 07, 2025 14:53

நீங்கள் தெரியாமல் கேட்கிறீர்கள் தெரிந்துகோள்வதற்காக அவர்கள் நியூஸ் போடுகிறார்கள்


gg
டிச 07, 2025 15:27

adha nee vera edho oorla irundhu podra paaru..


Field Marshal
டிச 07, 2025 15:58

டேவிட் ரபேல் என்று அரபியில் எழுதுகிறார் ..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை