மேலும் செய்திகள்
சோலார் எனர்ஜி தயாரிப்பு பயிற்சி
12-Sep-2024
பாகல்கோட்: பாகல்கோட்டில் இருந்து மஹாராஷ்டிராவுக்கு மாநில அரசின் பால் பவுடர் கடத்தப்படுவதாக பாகல்கோட் டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.நேற்று காலை பாதாமி - மும்பை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தி, சோதனை நடத்தியபோது, பால் பவுடர், தினை மாவு இருந்தது.இதுதொடர்பாக சுலிகேரி கிராமத்தின் சித்தப்பா என்பவரை போலீசார் கைது செய்தனர். பால் பவுடரை பள்ளிகளுக்கு வினியோகம் செய்யாமல், மஹாராஷ்டிராவுக்கு கடத்தியது தெரிந்தது. 4,474 கிலோ எடையுள்ள பால் பவுடர் பறிமுதல் செய்யப்பட்டது.
12-Sep-2024