உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பி.டி.ஏ.,விலும் முறைகேடு  சிநேகமயி கிருஷ்ணா பகீர்

பி.டி.ஏ.,விலும் முறைகேடு  சிநேகமயி கிருஷ்ணா பகீர்

மைசூரு: ''பெங்களூரு பி.டி.ஏ.,விலும் முறைகேடு நடந்து உள்ளது,'' என்று, மைசூரு சமூக ஆர்வலர் சிநேகமயி கிருஷ்ணா கூறி உள்ளார்.மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:எனக்கும், எனது குடும்பத்திற்கும் மத்திய அரசின் பாதுகாப்பு கேட்டு, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதி இருக்கிறேன். பாதுகாப்பு கிடைக்குமா, கிடைக்காதா என்பது தெரியவில்லை. என் உயிர் போனாலும் பரவாயில்லை. ஆனால் எனது குடும்பத்தினருக்கு எந்த தொந்தரவும் ஏற்பட கூடாது என்பதால் பாதுகாப்பு கேட்கிறேன்.நான் இறந்து விட்டால், 'முடா' வழக்கு நின்றுவிடும் என்று நினைக்கின்றனர். ஆனால் அது சாத்தியம் இல்லை. நான் செத்து போனாலும், ஊழலுக்கு எதிரான போராட்டம் நடக்கும். முதல்வர் சித்தராமையா குடும்பத்திற்கு எதிராக மட்டும் போராடவில்லை. முடாவில் முறைகேடு செய்த, அனைத்து கட்சி அரசியல்வாதிகளுக்கு எதிராக எனது போராட்டம் உள்ளது.முறைகேடு செய்து வாங்கிய வீட்டுமனைகள், முடாவுக்கு திரும்பி வர வேண்டும். பினாமி பெயரில் சொத்து வாங்கியவர்களுக்கு, தண்டனை கிடைத்தே தீர வேண்டும். அரசு நிலத்தை தங்கள் நிலம் என்று நினைப்பவர்களுக்கு புத்தி புகட்ட வேண்டும். ஆட்சி, அதிகாரத்தில் இருப்பவர்கள் மனநிலையை பொறுத்தே முறைகேடுகள் நடக்கின்றன.முடாவில் முறைகேடு செய்து வாங்கிய 60 கோடி ரூபாய் நிலத்தை, முதல்வர் குடும்பத்தினர் திரும்ப ஒப்படைத்தனர். இந்த கோபத்தில் எனக்கு பல வழிகளில், தொல்லை கொடுக்கப்படுகிறது. லோக் ஆயுக்தா விசாரணை நியாயமாக நடக்கவில்லை.இந்த வழக்கில் முடா முன்னாள் கமிஷனர்கள் நடேஷ், தினேஷ்குமாரை முதலில் கைது செய்ய வேண்டும். சி.பி.ஐ.,யிடம் ஒப்படைத்தால் தான் விசாரணை ஒழுங்காக நடக்கும். முடாவை போன்று, பெங்களூரு பி.டி.ஏ.,விலும் முறைகேடு நடந்து உள்ளது. ஆனால் அதுபற்றி வெளியே தெரியவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ