உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சபாஷ் பென்னி...! திருடுபோன ரூ.1 கோடியை மீட்க உதவிய நாய்!

சபாஷ் பென்னி...! திருடுபோன ரூ.1 கோடியை மீட்க உதவிய நாய்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் விவசாயி வீட்டில் திருடு போன 1 கோடி ரூபாய், போலீஸ் மோப்பநாய் உதவியால் மீட்கப்பட்டுள்ளது. அகமதாபாத் மாவட்டம் சரக்வாலா என்ற கிராமத்தை சேர்ந்தவர் உடேசின் சோலங்கி. லோத்தல் பகுதியில் உள்ள தமது நிலத்தை விற்ற அவர், அதில் கிடைத்த ரூ.1.07 கோடியை வீட்டில் வைத்து இருந்தார். கடந்த 11ம் தேதி புகுந்த திருடர்கள், அந்த பணத்தை திருடிச் சென்றுவிட்டனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=m9r8o4l1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதுகுறித்து உடேசின் போலீசில் புகார் அளிக்க, விசாரணை தொடங்கியது. திருடர்கள் எப்படி இந்த சம்பவத்தை அரங்கேற்றினர் என்பதை விசாரிக்க 19 பேர் கொண்ட தனிப்படையை போலீசார் அமைத்தனர். இதில் பென்னி என்ற மோப்ப நாயும் இடம் பெற்று இருந்தது.சம்பவ இடத்தில் பணம் இல்லாமல் காலியாக இருந்த பை ஒன்றை பென்னி மோப்பம் பிடித்தது. பின்னர், அதே பகுதியில் உள்ள புத்தா என்பவரின் வீட்டின் முன் சென்றது. இதையடுத்து, சந்தேக நபர்கள் பட்டியலில் இருக்கும் பலரையும், புத்தா என்பவர் உள்பட போலீசார் வரிசையாக நிற்க வைத்தனர்.அங்கே மோப்ப நாய் பென்னி வரவழைக்கப்பட்டது. வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்ட சந்தேக நபர்களில் புத்தா என்பவரை பென்னி சரியாக அடையாளம் காட்ட, அவரை போலீசார் கைது செய்தனர்.புத்தா வீட்டில் சோதனை நடத்திய போலீசார், கொள்ளை போன பணத்தை மீட்டனர். அவருக்கு உதவிய விக்ரம் என்பவரை போலீசார் பிடித்து பணத்தை பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் கூறியதாவது: உடேசின் தமது நிலத்தை விற்க முடிவு செய்து நெருங்கிய நண்பர் புத்தா என்பவரை அணுகி உள்ளார். ஆனால் அவர் உதவி செய்ய மறுத்துள்ளார். பின்னர் தாமாகவே வெளியூர் சென்று நிலத்தை விற்று ரூ.1.07 கோடியை வீட்டுக்கு கொண்டு வந்துள்ளார்.பணத்தை எங்கே வைப்பது என்று யோசித்து 7 லட்சம் ரூபாயை ஒரு பையிலும், 1 கோடியை மற்றொரு பையிலும் வைத்துள்ளார். பின்னர், அந்த பைகளை தமது வீட்டில் தானியங்கள் சேர்த்து வைத்து பெரிய பாத்திரம் ஒன்றில் வைத்துள்ளார்.நிலம் விற்று பணத்துடன் ஊருக்கு உடேசின் வந்திருப்பதை புத்தா அறிந்து, அவரது நண்பர் விக்ரம் என்பவருடன் அதை கொள்ளையடிக்க திட்டமிட்டு உள்ளார். உடேசின் இல்லாத நேரத்தில் அவரது வீட்டுக்கு சென்ற இருவரும் ஜன்னல் வழியாக பணத்தை திருடி உள்ளனர். இரண்டு பைகளில் 1 கோடி ரூபாய் பணத்தை பையுடன் எடுத்துக் கொண்ட அவர்கள், மற்றொரு பையில் இருந்த 7 லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு பையை அங்கேயே வீசிவிட்டனர். இந்த பை தான் கொள்ளையர்களை கண்டுபிடிக்க உதவியது. ஆனால் இந்த பையை உடேசின் மற்றும் அவருடன் இருந்த உறவினர்கள் தொட்டிருந்தனர். அதனால் விசாரணையில் சில தொழில்நுட்ப ரீதியான ஆதாரங்களை பெற்றும், மோப்ப நாய் உதவியுடனும் கொள்ளையர்களை பிடிக்க முடிந்தது.இவ்வாறு போலீசார் கூறி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

வைகுண்டேஸ்வரன்
அக் 19, 2024 15:22

விவசாயி எப்படி 1 கோடி பணப் பரிவர்த்தனை கேஷாக நடத்தினார்? எந்த சார்பதிவாளர் நிலம் விற்பனை பதிவு பண்ணி குடுத்தார்? இது RBI விதிகளின் படி சட்ட விரோதமல்லவா????


நிக்கோல்தாம்சன்
அக் 19, 2024 18:43

இந்த கேள்வியை பெங்களூரு ஹெப்பால் MLA , டிகேசி போன்ற தரகர்களின் டிரைவர்களை கேட்டு பாருங்க அவனுங்களே போதும்


ஆரூர் ரங்
அக் 19, 2024 10:30

விவசாய வருமானம் எவ்வளவு கோடி இருந்தாலும் வரி கிடையாது. நிலத்தை விற்றால் மூலதன ஆதாய வரியும் கிடையாது என்பதால் பெரும்பாலும் ரொக்கமாகவே பரிவர்த்தனைகள் நடக்கின்றன. இதனைப் பயன்படுத்தி அரசியல்வாதிகள் ஊழல் பணத்தை விவசாய வருமானமாக கணக்குக் காட்டி தப்பும் அக்கிரமம் நடக்கிறது. விவசாயம் சென்சிடிவ் மேட்டர் என்பதால் அரசுகள் இதனை மாற்றவே அஞ்சுகின்றன.


Kanns
அக் 19, 2024 09:07

Reward& Award all concerned Police Team incl Dog


raja
அக் 19, 2024 09:05

அப்படியே திருட்டு திராவிடன் சின்னவன் கொள்ளை அடித்த 30000 கோடியை இந்த பென்னி மீட்டு தந்தால் தமிழன் மிகவும் நன்றி உள்ளவனாக இருப்பான்...


sundarsvpr
அக் 19, 2024 08:51

தில்லுமுல்லு திருட்டுத்தனம் செய்து பல கோடி கணக்கில் கள்ள பணம் சேர்த்தவன் பாதுகாப்புடன் தைரியமாய் இருக்கிறார். ஆனால் நேர்மையாய் சொத்தை விற்று பணம் வைத்துஇருபவன் வங்கியில் வைத்திட தைரியம் இல்லை. காரணம் வட்டிக்கு கூட வரி கட்டவேண்டியுள்ளது. வீட்டின் சந்து போந்து தான் அவனுக்கு கருவூலம். வங்கியில் பணம் எடுத்தாலோ கட்டினாலோ தொலைபேசி ஆதார் கார்டு கேட்கின்றனர். ஏன் பணம் கட்டும்போது sourse of Income விபரம் பெற்று ரகசியமாய் வைத்துக்கொள்ளக்கூடாது.


Suppan
அக் 19, 2024 13:55

வட்டி வருமானமாதலால் அதற்கு வரி கட்டித்தான் ஆக வேண்டும். வீட்டில் பணமாக வைத்திருந்தால் அது குட்டி போடுமா சுந்தர் ? "வங்கியில் பணம் எடுத்தாலோ கட்டினாலோ தொலைபேசி ஆதார் கார்டு கேட்கின்றனர்." இதென்னய்யா புதுக்ககரடி? வங்கியில் கணக்கு ஆரம்பிக்கும் பொழுது பான் கார்டு நகல் கேட்கின்றனர்.


சாண்டில்யன்
அக் 19, 2024 08:32

விற்பனை பணத்தை பணமா தரக் கூடாதுன்னு டிஜிட்டல் பரிவர்த்தனைதான் அனுமதின்னு சொல்வாங்களே அந்த சட்டம் குஜராத்துக்கு கிடையாதோ?


ரெட்டை வாலு ரெங்குடு
அக் 19, 2024 10:11

இதே அபரசண்டி திராவிடன் சர்க்காரியா கமிஷன் ஊழல் சக்கரைமூடை கணக்குகேட்கையில் மழைத்தண்ணீரில் கரைந்து போயிற்று என்பதை கேள்விகேட்கவே மாட்டான் இவனுக்குத்தான் கட்டிங் அப்பப்ப வந்துடுதே . வாய்க்கரிசி வந்தா கேட் க மாட்டோம் என்கிறபுத்தி தமிழக உளுத்துப்போன பருப்புக்கு தெரியாதா ??


ஆரூர் ரங்
அக் 19, 2024 10:25

விவசாய விற்பனை சார்ந்த பரிவர்த்தனைகளுக்கு நெடுநாட்களாகவே உச்சவரம்பின்றி ரொக்கப் பரிமாற்றம் அனுமதிக்கப்பட்டுள்ளது . இதற்குக் கடிவாளம் போட வருமானவரித் முயன்றால் மீண்டும் போலி விவசாயிகள் போராட்டம் தூண்டப்படும்.


சாண்டில்யன்
அக் 19, 2024 10:48

கடந்த வாரம் ஆளுனர் ஏனோ டில்லி நிதி வருவது என்ன காரணமோ? டில்லி சந்திப்பில் போட்ட ஒப்பந்தமோ


ரெட்டை வாலு ரெங்குடு
அக் 19, 2024 11:25

ஆளுநருக்கும் மாநிலத்திற்கு வரவேண்டிய நிதிக்கும் சம்மதமே இல்லை . இதுகூட தெரியாத முட்டுதான் திருட்டுடரவிட அடிவருடி. வாய்க்குவந்தபடி உளறுவது தான் முழுநேர வேலை. உங்களுக்கு நிதிதானே வேணும் , வேணுங்கறதை சண்டைபோட்டுக்காம கேட்டு வாங்கிக்க


Kalyanaraman
அக் 19, 2024 08:16

குஜராத் போலீஸுக்கு பாராட்டுக்கள். இதுவே தமிழகமாக இருந்தால் 40% கமிஷனாக போயிருக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை