உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / " விவசாயிகள் பயனடையும் திட்டங்கள் " - பிரதமர் மோடி உறுதி

" விவசாயிகள் பயனடையும் திட்டங்கள் " - பிரதமர் மோடி உறுதி

புதுடில்லி: விவசாய பிரச்னைகளுக்கு தீர்வு காண பா.ஜ., அரசு உறுதிபூண்டுள்ளது என பிரதமர் மோடி கூறினார்.இது குறித்து பிரதமர் மோடி எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் உள்ள விவசாய சகோதர சகோதரிகளின் நலன் தொடர்பான ஒவ்வொரு பிரச்னையும் நிறைவேற்ற பா.ஜ., அரசு உறுதிபூண்டுள்ளது. கரும்பு கொள்முதல் விலையில் வரலாற்று சிறப்புமிக்க உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் நமது கரும்பு உற்பத்தி செய்யும் கோடிக்கணக்கான விவசாயிகள் பயனடைவார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Oviya Vijay
பிப் 22, 2024 12:12

வெத்து வேட்டு...


Sampath Kumar
பிப் 22, 2024 11:10

இந்த வாயில் வடை சுட்டு கொடுத்தது போதும் விவசாய்களின் குறைகளை கேட்டு உடனடி நடவடிக்கை தேவை இல்லாவிட்டால் இது தேர்தலில் எதிர் ஒலிக்கும்


சாமிநாதன்,மன்னார்குடி
பிப் 22, 2024 11:44

சமச்சீர் சம்பத்து விடியா அரசு இங்க விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்ட போது வாயில என்ன தயிர் வடையா வச்சிருந்த?


MARUTHU PANDIAR
பிப் 22, 2024 15:10

""சம்பத்து""க்கள் லட்சம் பேரை அமெரிக்காவும் சீனாவும் எல்லா லெவலில் சம்பளம் குடுத்து வேலைக்கு வெச்சிருக்காங்க தெரியுமா?


Seshan Thirumaliruncholai
பிப் 22, 2024 10:54

விவசாயிகளின் கோரிக்கையை பற்றி விசனப்படுவதை முதலில் தவிர்க்கவேண்டும். எப்போதும் திருப்தி காணாத சமூகம் இவர்கள். நல்ல கொள்முதல் கண்டோம் என்று உண்மையை கூற தயங்கும் சமூகம். இவர்களால் நன்மை அடைந்தது இடைத்தரகர் வணிகர் மட்டுமே.


Narayanan Muthu
பிப் 22, 2024 10:16

முதலில் விவசாயிகளின் போராட்டத்தை பெருமுதலாளிகளுக்காக ஒடுக்குவதை விட்டு அவர்களின் நலனுக்கு உகந்த முடிவை எடுங்கள். இது விவசாயிகளின் போராட்டம் மட்டும் அல்ல. மக்களின் ஏகோபித்த ஆதரவு கொண்ட போர் என்பதை மனதில் கொள்ளுங்கள்.


ஆராவமுதன்,சின்னசேலம்
பிப் 22, 2024 11:40

சோனமுத்தா அக்கப்போர்னு வேணா சொல்லு அதவிட்டு...


ராஜா
பிப் 22, 2024 11:41

ஆமாம் தமிழ்நாட்டில் முதலாளிகள் யாரும் இல்லை. எல்லோரும் கழகங்களின் அரசியல் வியாதிகள் தான். இந்த கொள்ளை கூட்டத்தை தாண்டி யாராவது வளர்ந்துவிட முடியுமா என்ன? இந்தியாவில் பஞ்சாபில் மட்டும் தான் மக்கள், விவசாயிகள் இருக்கிறார்கள் போல.


Narayanan Muthu
பிப் 22, 2024 10:13

எது துப்பாக்கி சூடு நடத்தி விவசாயிகளை உயிர் பலி கொள்வதும் காயமடைய வைப்பதும் தான் மோடி அரசின் விவசாயிகள் பயனடையும் திட்டங்களோ.


ராஜா
பிப் 22, 2024 11:42

அதை விவசாயிகள் மேல் குண்டர் சட்டம் போட்டவர்களுக்கு ஓட்டு போடுபவன் எல்லாம் பேசக்கூடாது.


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி