உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பொருளாதார பலத்தால் சில நாடுகள் அடாவடியில் ஈடுபடுகின்றன; யாரை சொல்கிறார் நிதின் கட்கரி!

பொருளாதார பலத்தால் சில நாடுகள் அடாவடியில் ஈடுபடுகின்றன; யாரை சொல்கிறார் நிதின் கட்கரி!

மும்பை: தொழில்நுட்பத்தில் அடைந்துள்ள வளர்ச்சி மற்றும் பொருளாதார பலம் காரணமாகவே சில நாடுகள் சர்வதேச அளவில் அடாவடியில் ஈடுபடுகின்றனர் என மத்திய சாலைப்போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.அமெரிக்காவிடமிருந்து இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வரிகளை எதிர்கொண்டு வருகிறது. இதன் மூலம் அமெரிக்க வரலாற்றில் அதிக வரி விதிக்கப்படும் வர்த்தக கூட்டாளிகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. இந்நிலையில், நாக்பூரில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில், நடந்த நிகழ்ச்சியில் நிதின் கட்கரி பேசியதாவது: இந்தியா ஏற்றுமதியை அதிகரிக்கவும், இறக்குமதியைக் குறைக்கவும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுயசார்பை அடைய வேண்டும்.தொழில்நுட்பத்தில் அடைந்துள்ள வளர்ச்சி மற்றும் பொருளாதார பலம் காரணமாகவே சில நாடுகள் சர்வதேச அளவில் அடாவடியில் ஈடுபடுகின்றனர். சிறந்த தொழில்நுட்பம் மற்றும் வளங்கள் நமக்குக் கிடைத்தால், நாம் யாரையும் மிரட்ட மாட்டோம், ஏனென்றால் உலக நலன் மிக முக்கியமானது என்பதை நமது கலாசாரம் நமக்குக் கற்பிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

யாரை சொல்கிறார்?

அமெரிக்காவின் அதிக வரிவிதிப்பை இந்தியா எதிர்கொள்ளும் நேரத்தில், சில நாடுகள் சர்வதேச அளவில் அடாவடி செய்வதாக, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கடுமையாக சாடி பேசி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
ஆக 10, 2025 21:14

நேரடியாகவே அமெரிக்கா என்று கூறலாம். ஏன் டிரம்புக்கு பயப்படவேண்டும்? எப்பொழுதும் உண்மையை உரக்க சொல்லவேண்டும் என்று முதியோர்கள் கூறிச்சென்றிருக்கிறார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை