மேலும் செய்திகள்
காங்., நிர்வாகிகள் மீது மேலிட தலைவர் அதிருப்தி
28-Oct-2024
பெங்களூரு: 'பா.ஜ., -- எம்.எல்.ஏ.,க்கள், காங்கிரசுக்கு செல்வர்' என, அவ்வப்போது சர்ச்சையை கிளப்பி வரும், முன்னாள் அமைச்சர் சோமசேகருக்கு, பா.ஜ., - எம்.எல்.ஏ., பைரதி பசவராஜ் கண்டனம் தெரிவித்தார்.காங்கிரசில் இருந்த சோமசேகர், பைரதி பசவராஜ், பி.சி.பாட்டீல் உட்பட பலர், 2019ல் பா.ஜ.,வில் இணைந்தனர். இடைத்தேர்தலில் வெற்றி பெற்று, அமைச்சர்களாகவும் இருந்தனர்.கடந்த 2023 சட்டசபை தேர்தலில், பா.ஜ., வெறும் 66 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றது. காங்கிரஸ் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தது. அதன்பின் சோமசேகர், சிவராம் ஹெப்பாரின் பார்வை, காங்கிரஸ் மீது திரும்பியது. லோக்சபா தேர்தல்
லோக்சபா தேர்தலின்போதே, இவர்கள் காங்கிரசில் இணைவர் என, எதிர்பார்க்கப்பட்டது. கட்சித்தாவல் தடை சட்டத்துக்கு பயந்து, அணி மாறுவதை தள்ளி வைத்தனர்.இந்நிலையில், 'பா.ஜ.,வின் எட்டு எம்.எல்.ஏ.,க்கள், காங்கிரசில் இணைவர்' என, சோமசேகர் தெரிவித்தார். இது, பா.ஜ.,வினருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. பைத்தியக்காரத்தனம்
இதுதொடர்பாக, பைரதி பசவராஜ் நேற்று அளித்த பேட்டி:பைத்தியக்காரத்தனமாக பேசுவதை, சோமசேகர் நிறுத்த வேண்டும். தன் தனிப்பட்ட லாபத்துக்காக அவர் இது போன்று பேசுகிறார். மனம் போனபடி பேசி, மற்றவரின் கவுரவத்தை குலைக்கக் கூடாது.பா.ஜ.,வின் எந்த எம்.எல்.ஏ.,வும், காங்கிரசுக்கு செல்லவில்லை. யூகங்கள் அடிப்படையில் பேசக்கூடாது. காங்கிரசுக்கு செல்ல தயாராகும் எம்.எல்.ஏ.,க்கள் யார்? சோமசேகருக்கு தெரிந்திருந்தால் அவர்களின் பெயரை பகிரங்கப்படுத்தட்டும்.நாங்கள் காங்கிரசை விட்டு விலகி, பா.ஜ.,வுக்கு வந்தவர்கள். இப்போது கட்சித் தொண்டர்களாக செயல்படுகிறோம். நாங்கள் யாரும் காங்கிரசுக்கு செல்லவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
28-Oct-2024