உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெற்றோரின் சண்டையால் மனம் நொந்து மகன் தற்கொலை

பெற்றோரின் சண்டையால் மனம் நொந்து மகன் தற்கொலை

சாம்ராஜ்நகர்: பெற்றோர் சண்டையை சகிக்க முடியாமல், மகன் தற்கொலை செய்து கொண்டார்.பெங்களூரு ரூரல் தொட்டபல்லாபூரைச் சேர்ந்தவர் சிவசாமி. இவர்களின் குடும்பம் தற்போது பெங்களூரின், நாயண்டஹள்ளியில் வசிக்கிறது. இவரது மகன் சந்தீப்குமார், 26, தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார்.சிவசாமியின் மனைவி மனநலம் பாதிக்கப்பட்டவர். இதனால் தம்பதிக்கு இடையே தினமும் சண்டை நடக்கும். பெற்றோருக்கு சந்தீப் குமார் அறிவுரை கூறியும் பயனில்லை. சிறு சிறு விஷயங்களுக்கும் சண்டை போட்டதால், வீட்டில் அமைதியின்மை ஏற்பட்டது.தினமும் பெற்றோரின் சண்டையை பார்த்து சலிப்படைந்த சந்தீப்குமார், இம்மாதம் 2ம் தேதி பைக்கில் வீட்டில் இருந்து புறப்பட்டார். மீண்டும் வீடு திரும்பவில்லை. மகனை காணாமல் போலீசில் புகார் கொடுத்தனர்.கொள்ளேகால் ஊரக போலீசார், சிவசமுத்ரா அருகே, காவிரி ஆற்றின் கரையில் நின்றிருந்த பைக்கை பார்த்து சந்தேகம் அடைந்தனர். ஆற்றில் தேட நடவடிக்கை எடுத்தனர். ஆற்றில் அவர் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.பெற்றோரின் சண்டையை சகிக்க முடியாமல், மகன் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை