வாசகர்கள் கருத்துகள் ( 4 )
போகும் போது கொண்டு போவது ஏதுமில்லை. ஆன்மீகத்தில் நாட்டமில்லா பிறவிகள் இப்படித்தான் நடந்து கொள்வார்கள்.
பணம் தான் உலகம், மனசாட்சி இல்லாத மகன்
வடக்கன் புத்தி அப்படி தான் வேலை செய்யும்
? பண விஷயத்தில் எல்லோரும் ஒருவரே.
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் உயிர் இழந்த தாயின் வெள்ளி வளையல்கள் உள்ளிட்ட நகைகளை, அவரை இறுதிக் காலத்தில் பார்த்துக்கொண்ட மூத்த மகனிடம் ஒப்படைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த இளைய மகன், தகனம் செய்வதற்காக அடுக்கப்பட்டிருந்த விறகு கட்டைகள் மீது ஏறி உட்கார்ந்து, இறுதிச் சடங்கை நிறுத்த முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள விராட் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பூரி தேவி, 80. இவருக்கு ஏழு மகன்கள். ஐந்தாவது மகனான ஓம் பிரகாஷ் தனியாக வசித்து வந்தார். பூரி தேவியை அவரின் மூத்த மகன் கிர்தாரி லால் கவனித்து வந்தார்.சமீபத்தில் பூரி தேவி முதுமை காரணமாக உயிரிழந்தார். அவர் வசமிருந்த சில ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வெள்ளி வளையல்கள் மற்றும் பிற நகைகள் மூத்த மகன் கிர்தாரி லாலிடம் ஒப்படைக்கப்பட்டன. அதன் பின் பூரி தேவியின் இறுதிச்சடங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.சுடுகாட்டிற்கு வந்த மகன் ஓம் பிரகாஷ், தாயின் வெள்ளி வளையல்களை என்னிடம் தான் தர வேண்டும் என சண்டை போட்டார். ஒரு கட்டத்தில் தாயின் உடலை தகனம் செய்வதற்காக அடுக்கப்பட்டிருந்த விறகு கட்டைகள் மீது ஏறி படுத்து கொண்டு, 'நகைகளை தரவில்லை என்றால் என்னையும் சேர்த்து எரியூட்டுங்கள்' என்றார்.இதையடுத்து, வீட்டிலிருந்து வெள்ளி வளையல்களை எடுத்து வந்து ஓம் பிரகாஷிடம் கொடுத்தனர். அதன் பின்னரே இறுதிச் சடங்கை நடத்த அனுமதித்தார். இதனால், இறுதிச் சடங்கு இரண்டு மணி நேரம் தாமதமானது. இந்த சம்பவத்தை ஒருவர் வீடியோவாக எடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டதும், அது வேகமாக பரவியது.
போகும் போது கொண்டு போவது ஏதுமில்லை. ஆன்மீகத்தில் நாட்டமில்லா பிறவிகள் இப்படித்தான் நடந்து கொள்வார்கள்.
பணம் தான் உலகம், மனசாட்சி இல்லாத மகன்
வடக்கன் புத்தி அப்படி தான் வேலை செய்யும்
? பண விஷயத்தில் எல்லோரும் ஒருவரே.