உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மருத்துவமனையில் சோனியா அனுமதி

மருத்துவமனையில் சோனியா அனுமதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: காங்., - பார்லி., குழு தலைவர் சோனியா, 78, உடல்நலக் குறைவு காரணமாக டில்லியில் உள்ள மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். ஹிமாச்சல பிரதேசத்தின் சிம்லாவுக்கு சமீபத்தில் சென்ற சோனியா, உயர் ரத்த அழுத்தம் காரணமாக, அங்குள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=869pnl5b&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதையடுத்து டில்லி வந்த அவர், சர் கங்கா ராம் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டார். இந்நிலையில், டில்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் சோனியா நேற்று மீண்டும் அனுமதிக்கப்பட்டார். வயிறு தொடர்பான பிரச்னை காரணமாக, மருத்துவமனையின் இரைப்பை சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு சிறப்பு டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல் நிலை சீராக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Abdul Rahim
ஜூன் 16, 2025 09:13

பூரண நலம் பெற்று விரைவில் குணமடைய வேண்டும்....


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 16, 2025 10:57

பூரண நலம் மற்றும் குணமடைதல் இரண்டின் பொருள் ஒன்றே .....


Svs Yaadum oore
ஜூன் 16, 2025 08:15

வடக்கே சரியான மருத்துவம் கிடையாது.. வடக்கே அங்கெல்லாம் படிப்பறிவு கிடையாது.. தமிழ் நாடு படித்து முன்னேறிய மாநிலம் ..இங்கு மருத்துவம் உலக தரத்தில் உள்ளது... இவரை உடனடியாக சென்னைக்கு அழைத்து இங்கு அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்து, இலவசமாக மருத்துவம் செய்ய விடியல் ஏற்பாடு செய்ய வேண்டும் ..


Svs Yaadum oore
ஜூன் 16, 2025 07:12

டில்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் சோனியா நேற்று மீண்டும் அனுமதிக்கப்பட்டாராம் .....இது தனியார் மருத்துவமனை ....வடக்கே சரியான மருத்துவம் கிடையாது .... வடக்கே அங்கெல்லாம் படிப்பறிவு கிடையாது ...தமிழ் நாடு படித்து முன்னேறிய மாநிலம் ...இங்கு அரசு மருத்துவமனையில் விடியல் உலக தரத்திற்கு மருத்துவம் இலவசமாக கொடுக்கிறது ...அதனால் இவரை உடனடியாக சென்னைக்கு அழைத்து இங்கு அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்து, மருத்துவம் செய்ய விடியல் ஏற்பாடு செய்ய வேண்டும் ..


ஜூன் 16, 2025 07:12

நலம்பெற வாழ்துக்கள்..


SUBBU,MADURAI
ஜூன் 16, 2025 06:13

ஆண்டவா நல்லபடியா போய் சேர்ந்தா சரி, வீட்டுக்கு!


சமீபத்திய செய்தி