மேலும் செய்திகள்
இளம்பெண் தற்கொலை முயற்சி
2 hour(s) ago
சிப்பி காளான் வளர்ப்பு செயல் விளக்கம்
2 hour(s) ago
4 பேரிடம் ரூ.1.61 லட்சம் அபேஸ்
2 hour(s) ago
காங்கிரஸ் தலைவராக பதவியேற்ற பின், 1999ல் முதல் முறையாக லோக்சபா தேர்தலில், சோனியா வென்றார். கடந்த 2004 வரை உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதியிலும், 2004ல் இருந்து உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியிலும் தொடர்ந்து எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.தற்போது, 77 வயதாகும் சோனியா, கடந்த லோக்சபா தேர்தலின்போதே, இனி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று கூறி வந்தார்.இந்நிலையில், ராஜ்யசபா தேர்தலில், ராஜஸ்தானில் இருந்து அவர் நேற்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருடைய மகன் ராகுல், மகள் பிரியங்கா, முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் உள்ளிட்டோர் உடனிருந்தனர். தற்போது பா.ஜ., ஆளும் ராஜஸ்தானில், மூன்று ராஜ்யசபா இடங்கள் காலியாகின்றன. இதில், ஒரு இடத்தில் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்கான போதிய பலம் உள்ளது. இதன்படி, ராஜஸ்தானில் இருந்து போட்டியிட சோனியா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பதவிக்காலம் முடிவடைவதையடுத்து, காலியாக உள்ள இடத்தில் சோனியா போட்டியிடுகிறார்.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago