உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரயில்வேயில் அப்ரென்டிஸ் வேலை வேணுமா: இன்னும் 3 நாட்கள் தான் இருக்கு!

ரயில்வேயில் அப்ரென்டிஸ் வேலை வேணுமா: இன்னும் 3 நாட்கள் தான் இருக்கு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தெற்கு ரயில்வே பிட்டர், டர்னர், மெஷினிஸ்ட், பிளம்பர், டீசல் மெக்கானிக், பெயின்டர், வயர்மேன், எலக்ட்ரீசியன், வெல்டர், எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் ஆகிய பிரிவுகளில் அப்ரென்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 10ம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ., தேர்ச்சி பெற்றவர்களுக்கு வாய்ப்பு; மொத்தம் 2,438 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பிக்க கடைசி நாள் ஆக.,12ம் தேதி.தெற்கு ரயில்வேக்கு உட்பட சென்னை, கோவை, திருச்சி, திருவனந்தபுரம், சேலம், பாலக்காடு கோட்டம், பெரம்பூர், அரக்கோணம் பணிமனை உள்ளிட்ட இடங்களில், 2,438 தொழில் பழகுநர் (apprentice) பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கல்வி தகுதி என்ன?

இந்த பயிற்சி இடங்களுக்கு, பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் அந்தந்த பிரிவில் ஐ.டி.ஐ., முடித்திருக்க வேண்டும் எம்.எல்.டி., பணியிடங்களுக்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது

விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கு 15 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் பணியிடங்களுக்கான கல்வித் தகுதி படிப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிப்பது எப்படி?

https://sr.indianrailways.gov.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி தேதி வரும் ஆகஸ்ட் 12. இன்னும் 3 நாட்கள் மட்டும் உள்ளன.

விண்ணப்பிக்க கட்டணம்

பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. எஸ்.சி, எஸ்.டி., மற்றும் மகளிர் ஆகியோர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

அப்பாவி
ஆக 09, 2024 16:13

இதுவரை 20 லட்சம் பேர் அப்ளை பண்ணியிருப்பாய்ங்க. மீதம்.பேர் சீக்கிரம் போங்க.


S. Narayanan
ஆக 09, 2024 14:35

ஆசிரியர் அவர்களே இது போல நிறைய வேலை வாய்ப்பு செய்திகளை கொடுத்தால் ஏழை மக்கள் பயன் பெறுவர். அவர்களுக்கு ஆன்லைன் செய்திகள் பார்ப்பது கடினம்.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை