மேலும் செய்திகள்
மகளிர் உரிமைத்தொகை தி.மு.க., - எம்.எல்.ஏ., உறுதி
10-Jan-2025
அசோக் நகர்: ஸ்பெயின் நபர் வீட்டில் திருட்டு
பெங்களூரு அசோக் நகர் லாங்போர்ட் டவுனில் உள்ள நாயுடுஸ் அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஸ்பெயின் நாட்டை சேர்ந்த அப்ரில் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.கடந்த 14ம் தேதி இரவில், இவர் வீட்டில் திருட்டு நடந்துள்ளது. மறுநாள் காலையில் திருட்டுப் போனது தெரிந்தது. அசோக் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.புகாரில், 'வீட்டின் கழிப்பறையில் உள்ள கண்ணாடியை உடைத்துக் கொண்டு திருடர்கள் வந்துள்ளனர். வீட்டிலிருந்த 10 ஆயிரம் ரூபாய் ரொக்கம் உட்பட 82 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டுள்ளது' என்று கூறியுள்ளார்.
10-Jan-2025