உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உறுதிமொழி ஏற்பதில் சபாநாயகர் உத்தரவு !

உறுதிமொழி ஏற்பதில் சபாநாயகர் உத்தரவு !

- நமது டில்லி நிருபர் - எம்.பி.,க்கள் பதவி ஏற்கும்போது வாசிக்கும் உறுதிமொழியுடன் வேறு எந்த வார்த்தையும் சேர்க்கக் கூடாது என லோக்சபா விதிகள் திருத்தப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி.,க்கள் கடந்த மாதம் 24, 25ல் பதவி ஏற்றனர். குறிப்பில் இருந்த பதவியேற்பு உறுதிமொழியை மட்டும் வாசிக்காமல், இஷ்டத்துக்கு கோஷங்களை அள்ளிவிட்டனர். பா.ஜ., உறுப்பினர்கள் பலர், 'ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஜகந்நாத், பாரத் மாதாகி ஜே, ஜெய் ஹிந்து ராஷ்டிரா' என முழங்கினர். காங்கிரஸ் உறுப்பினர்கள் 'ஜெய் சம்விதான்' என அரசியல் சாசனத்துக்கு வாழ்த்து கூறி பதவியேற்றனர். 'கோஷங்கள் எழுப்ப வேண்டாம்' என இடைக்கால சபாநாயகர் பர்த்ருஹரி மஹ்தாப் விடுத்த வேண்டுகோளை எவரும் கண்டுகொள்ளவில்லை.மேற்கு வங்க எம்.பி.,க்கள், 'ஜெய் பங்களா' என்றனர். தெலுங்கானாவின் அசாதுதீன் ஓவைசி, 'ஜெய் பீம், ஜெய் மிம், ஜெய் தெலுங்கானா, ஜெய் பாலஸ்தீனம்' என்று வரிசையாக வாழ்த்துகளை அடுக்கினார். உச்சமாக, தமிழக எம்.பி.,க்கள் எழுப்பிய கோஷங்கள் வேறு ரகம். தாய் - தந்தை பெயரை குறிப்பிட்டும், சொந்த ஊர், தாலுகா, மாவட்டம் பெயரை குறிப்பிட்டும் சிலர் பதவி ஏற்றனர். சிலர் அண்ணாதுரை, கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி பெயர்களை கூறி வாழ்க கோஷமிட்டனர். மேலும் சிலர் தங்களுக்கு சீட் வாங்கிக் கொடுத்த தமிழக அமைச்சர்களின் பெயர்களை கூறி விசுவாசத்தை வெளிப்படுத்தினர். இந்த செயல்கள், லோக்சபாவின் மாண்பை சீர்குலைத்ததாக சீனியர் எம்.பி.,க்கள் வருந்தினர். சபைக்கு என்று தனி கண்ணியம் உள்ளது, அதை கட்டிக்காக்க வந்துள்ள இவர்கள் இஷ்டத்துக்கு கோஷம் போட்டு, வேடிக்கை மன்றமாக மாற்றுகின்றனரே என ஆதங்கப்பட்டனர்.சபாநாயகர் பிர்லாவும் சபையில் தன் கவலையை தெரிவித்தார். இதற்கு தீர்வு காணப்படும் என்று கூறினார். அதன்படி, பதவியேற்பு விதிகளில் சில திருத்தங்களை சபாநாயகர் அறிவித்துள்ளதாக லோக்சபா செயலகம் நேற்று தெரிவித்தது. ஏற்கனவே உள்ள விதிகளுடன், மூன்று உட்பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. அனைத்து மொழிகளிலும் அச்சிட்டு வழங்கப்படும் தாளில் உள்ள வாசகங்களை மட்டுமே உறுப்பினர்கள் வாசித்து பதவி ஏற்க வேண்டும். உறுதிமொழி வாசிக்கும்போதும், அதற்கு முன்பும், பின்பும் கூடுதலாக எந்த வார்த்தையோ, பெயரோ, கோஷமோ உச்சரிக்க கூடாது என உறுதியாக தெரிவிக்கப்பட்டுஉள்ளது. அவ்வாறு சேர்த்தால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை சபாநாயகர் உத்தரவு விளக்கவில்லை. எனினும், உள்ளது உள்ளபடி உறுதிமொழியை வாசித்தால் மட்டுமே உறுப்பினரின் பதவியேற்பு செல்லுபடியாகும் என்பது உத்தரவின் உள்ளர்த்தம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

RAMAKRISHNAN NATESAN
ஜூலை 05, 2024 20:57

திமுக அடிமைகள் தங்கள் தலைமைக்குடும்ப விசுவாசத்தைக் காட்டக்கூடாது என்கிறாரே ??


M Ramachandran
ஜூலை 05, 2024 19:59

அடி மாடுகள் தான் கொல்லப்பட போவதைய்ய அறியாத மாடுகள் போல் கட்சி தலமைக்கு விஷவாசாம் என்ற பெயரில் சபை மாண்பை நார அடிக்கிறார்கள். இப்பேர்பட்டவர்கள் எப்படி தேஆர்தெடுத்த மக்களுக்கு உண்மையானவர்களாய் இருக்க போகிறார்கள்?


Vaduvooraan
ஜூலை 05, 2024 19:24

மத்த மாநில உறுப்பினர்கள் பற்றி தெரியாது நம்ம தமில் நாட்டு உறுப்பினர்களை பொறுத்த வரை இது பெரிய அநீதி கேன்டீனில் போண்டா காபி சாப்பிடுவது, யார் என்ன பேசறாங்கன்னு காது கொடுத்து கேட்காம ஷேம் ஷேம் என்று கத்துவது இவற்றைத் தவிர உருப்படியாக அவர்கள் செய்ய முடிந்தது எல்லாம் திமுகவின் முதற் குடும்பத்துக்கு அவ்வப்போது இந்த மாதிரி தங்கள் விசுவாசத்தை பறை சாற்றுவதுதான் அதையும் தடை செஞ்சா பொழப்பு பாதிக்கப்படுமே?


venugopal s
ஜூலை 05, 2024 16:16

முதலில் இந்த ஜெய் ஸ்ரீ ராம்,பாரத் மாதா கீ ஜே, வந்தே மாதரம் என்று சொல்லி நாட்டை ஏமாற்றுபவர்களை நம்பி ஏமாறாதீர்கள்!


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 05, 2024 20:52

திராவிடம்-ஆரியம், வடக்கு-தெற்கு, தமிழினம், கட்டுமரம் இப்படியெல்லாம் பேசி ஏமாற்றிய திமுகவிடம் அவர்களும் கற்றுக்கொண்டார்கள் ..... வித்தை ஒன்றே .... வார்த்தைகள் மட்டும் வேறு வேறு .....


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 05, 2024 20:59

நீங்கள் குறிப்பிட்ட கோஷங்களை பாஜக மக்கலவையிலா எழுப்புகிறது ???? ஜனநாயகத்தின் ஒரு தூணாகிய மக்களவையில் திமுக அடிமைகள் தங்கள் தலைமைக்குடும்ப விசுவாசத்தைக் காட்டுவது தவறில்லை என்கிறீர்களா ????


Vathsan
ஜூலை 05, 2024 12:27

முதலில் ஜெய் மோடி, ஜெய் அமித் ஷா என்று கத்தும் பாஜகவினரை அடக்கி வையுங்கள்.


enkeyem
ஜூலை 05, 2024 13:26

சும்மா இஷ்டத்திற்கு உருட்டதே. பி ஜெ பி உறுப்பினர்கள் உறுதி ஏற்ற பின் பாரத் மாதா கி ஜெய் என்றுதான் கூறினார்கள். கொத்தடிமைகள் சிலர்தான் குடும்ப கட்சி விசுவாசத்தை காட்ட ஏதேதோ பிதற்றினர்


duruvasar
ஜூலை 05, 2024 12:16

அப்போ இனி எப்போதும் அன்பு நிதியின் பெயரை பார்லிமெண்ட் வளாகத்தில் ஓங்கி ஒலிக்க செய்ய முடியாதா ? இது என்ன கருணாநிதி குடும்பத்திற்க்கு வந்த சோதனை.ஒரே வேதனைதான் போங்க.


Kasimani Baskaran
ஜூலை 05, 2024 10:22

கேள்வி கேட்டு பதில் சொல்லும் பொழுது ஓடிப்போய் கேண்டீனில் இடம்பிடித்து போண்டா சாப்பிட விடக்கூடாது


Sundar R
ஜூலை 05, 2024 08:04

குதிரைகளுக்கு கடிவாளம் போட்ட முதல் சபாநாயகர்.


K.Muthuraj
ஜூலை 05, 2024 09:06

குதிரையாக்கும். கோவேறு கழுதைகள்.


அரசு
ஜூலை 05, 2024 08:04

உங்களுக்கு இரண்டாவது முறையாக பதவி கொடுத்ததற்க்காக நீங்கள் செய்யும் நன்றிக் கடன்.


sridhar
ஜூலை 05, 2024 07:32

A long overdue order. There should be a standard text for taking oath in parliament / assemblies with some permissible options only. , Oath taking is not the time for raising unnecessary slogans or singing in praise of abominable leaders.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை