| ADDED : மார் 19, 2024 10:17 PM
புதுடில்லி:குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ஜோதிடரை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.டில்லியைச் சேர்ந்த 36 வயது பெண், சொத்துப் பிரச்னையை தீர்க்க, கடந்த ஜனவரி 24ம் தேதி,மாளவியா நகரைச் சேர்ந்த கவுரவ் அகர்வால் என்ற ஜோதிடரை அணுகினார்.அந்தப் பெண்ணுக்கு ஜோதிடத்தில் ஆர்வம் இருப்பதை அறிந்த கவுரவ், அவருக்கு சில பலன்கள் கூறினார்.மேலும், இந்த சொத்துப் பிரச்னையை சுமுகமாக தீர்த்து வைப்பதாகவும் உறுதியளித்தார்.திடீரென ஒருநாள், சொத்து பிரச்னை குறித்து பேச நெப் சராய் பகுதியில் உள்ள தன் நண்பன் வீட்டுக்கு அந்தப் பெண்ணை அழைத்துள்ளார்.அந்தப் பெண் சென்ற போது, குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார். அந்தப் பெண் மயங்கியதும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மயக்கம் தெளிந்து எழுந்த பெண், இதுகுறித்து போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப் பதிவு செய்ததை அறிந்த கவுரவ், தலைமறைவானார். இந்த வழக்கில், ஜோதிடர் கவுரவ் அகர்வாலைப் பிடிக்க நேற்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.