உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் இலங்கை அதிபர் அநுர குமார திசநாயகேவுக்கு அணிவகுப்பு மரியாதை

டில்லியில் இலங்கை அதிபர் அநுர குமார திசநாயகேவுக்கு அணிவகுப்பு மரியாதை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் ஜனாதிபதி மாளிகையில் இலங்கை அதிபர் அநுர குமார திசநாயகேவுக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இலங்கையில் அண்மையில் நடந்த அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுர குமார திசநாயகே அமோக வெற்றி பெற்றார். தேர்தலில் வென்று அதிபரான அவர், முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா வந்துள்ளார். 2 நாள் சுற்றுப் பயணமாக வந்துள்ள அவரை, நேற்றிரவு மத்திய அமைச்சர் எல்.முருகன் வரவேற்றார்.இந்நிலையில், இன்று (டிச.,16) டில்லியில் ஜனாதிபதி மாளிகையில் இலங்கை அதிபர் அநுர குமார திசநாயகேவுக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பிரதமர் மோடியை இலங்கை அதிபர் அநுர குமார திசநாயகே சந்தித்து பேச உள்ளார். அப்போது இரு நாடுகளுக்கு இடையே உறவை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

VSMani
டிச 16, 2024 12:34

தமிழ் மக்களை கொன்று குவித்த சிங்களனுக்கு இரத்தின கம்பள வரவேற்பா? தமிழர் மத்திய அமைச்சர் முருகன் வரவேற்றாரா? சீமான் பொங்கி எழவில்லையே?


vijay
டிச 16, 2024 13:38

வேணுமின்னா உக்ரைனை ரஸ்சியா தாக்குவதுபோல இந்தியாவும் செய்யலாமா?


N Sasikumar Yadhav
டிச 17, 2024 05:58

உங்க பிராடுத்தனம் அப்படியே புல்லரிக்க வைக்கிறது . தமிழனை அழிக்க துணைப்போன ஊழல்மிகு இத்தாலிய கான்கிராஸ் திருட்டு திமுக உள்ளிட்ட புள்ளிராஜா இன்டி கூட்டணியினருக்கு ஓட்டுப்போட்டு ஜெயிக்க வைத்த நீங்க இதைப்பற்றி பேச வாயை திறக்க கூடாது . உண்மையாகவே தமிழன் மீது உங்களுக்கு பாசமிருந்தால் புள்ளிராஜா இன்டி கூட்டணியினருக்கு ஓட்டுப்போட்டிருக்க கூடாது


வைகுண்டேஸ்வரன், V chennai
டிச 17, 2024 07:37

டேய் மணி குண்டு மணியா இல்ல ஊசி மணியா ? கொன்று குவித்தது யார் ஆட்சியில்? அதன் பின், உங்க எஜமானர்கள் இலங்கை சென்று ராஜபக்சே கிட்ட வெகுமதி வாங்கி வந்தது.. .பாத்து கூவு. சேம் சைடு கோல் போடாத...200 ரூவா கட்டிங் வராது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை