உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கு ஸ்பெஷல் கிளாஸ் நடத்த உத்தரவு

எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கு ஸ்பெஷல் கிளாஸ் நடத்த உத்தரவு

பங்கார்பேட்டை : ''எஸ்.எஸ்.எல்.சி., படித்து வரும் அனைத்து மாணவர்களும் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் கூடுதலாக ஒரு மணி நேரம் ஸ்பெஷல் கிளாஸ் நடத்த வேண்டும்,'' என்று கோலார் மாவட்ட கல்வித்துறை இணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி வலியுறுத்தினார்.பங்கார்பேட்டை அரசுப் பள்ளியில், நேற்று முன்தினம், உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. அனைத்து உயர்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் பங்கேற்றனர். இதில், மாவட்ட கல்வித்துறை இணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடிவில், கோலார் மாவட்டம் பின்தங்கிய நிலையில் இருந்து வருவதை தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு மாணவரும் அதிக மதிப்பெண்கள் பெற கல்வியின் தொழில் நுட்பம் பயன்படுத்த வேண்டும். மாணவர்கள் தேர்ச்சி பெறுவது ஆசிரியர்களின் பொறுப்பு.மாதந்தோறும் நடத்துகிற தேர்வு, அரையாண்டு தேர்வு ஆகியவைகளின் போதே மாணவர்களின் கல்வித் தரம் தெரிந்து விடும். மாணவர்களை ஊக்கப்படுத்துங்கள்.மாணவர்கள், அதிக மதிப்பெண் எடுப்பதற்கான பயிற்சிகள் மிக அவசியம். பள்ளிக்கு வராமல் தவறும் மாணவர்களின் வீட்டுக்கு சென்று அறிவுரை கூறி, அவர்களை பள்ளிக்கு வர வைக்க வேண்டும்.எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்காக, அனைத்து பள்ளிகளிலுமே காலை 9:00 மணி முதல் 10:00 மணி வரை 'ஸ்பெஷல் கிளாஸ்' எனும் சிறப்பு வகுப்புகள் கட்டாயம் நடத்த வேண்டும்.அப்படி செய்தால் மட்டுமே கோலார் மாவட்டத்தின் கல்வித்துறைக்கு கவுரவம் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.கல்வித் துறை அதிகாரிகள் வீணா, சஹீரா அன்ஜூம், சங்கரே கவுடா, வட்டார கல்வி அதிகாரி குருமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை