உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மெட்ரோ, கல்வி நிதி கேட்டு ஸ்டாலின் வலியுறுத்தல்

மெட்ரோ, கல்வி நிதி கேட்டு ஸ்டாலின் வலியுறுத்தல்

டில்லியில் நேற்று பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளுக்கும், பள்ளி கல்வித் துறைக்கும், மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.டில்லியில் நேற்று காலை 11:00 மணிக்கு, பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார். 40 நிமிடங்கள் நீடித்த இச்சந்திப்பில், தமிழக கோரிக்கைகள் தொடர்பாக முதல்வர் வலியுறுத்தினார்; அந்த விபரங்கள் அடங்கிய மனுவையும் பிரதமரிடம் அளித்தார். தமிழ் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக உருவாக்கப்பட்ட, 'தடம்' பெட்டகத்தையும் பிரதமருக்கு பரிசாக வழங்கினார். பிரதமருடனான சந்திப்பு முடிந்ததும், முதல்வர் அளித்த பேட்டி:இனிய சந்திப்பாக இருந்தது. இதை பயனுள்ள சந்திப்பாக மாற்றுவது, பிரதமரின் கைகளில் தான் உள்ளது.சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதற்கட்ட பணிகளை போல, இரண்டாம் கட்ட பணிகளை, மத்திய, மாநில அரசுகள் இணைந்து நிறைவேற்ற வேண்டும்.மத்திய அரசு நிதி ஒதுக்காததால் பணிகள் தொய்வடைந்துள்ளன. மத்திய அரசு விரைவாக நிதி ஒதுக்க வேண்டும். ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில், மத்திய அரசு 2,152 கோடி ரூபாய் வழங்க வேண்டும். இதில், முதல் தவணை இன்னும் வழங்கப்படவில்லை.இந்த திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், தமிழக அரசு கையெழுத்து போடாததால், நிதி வழங்கப்படாமல் உள்ளது.தேசிய கல்வி கொள்கையில் உள்ள, பல நல்ல விஷயங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அதிலுள்ள மும்மொழி கொள்கையை ஒப்புக்கொள்ள தயாராக இல்லை. எனவே, இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் திருத்தப்பட வேண்டும் என்று சொல்லி வருகிறோம்.நிதி தராததால், ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க முடியவில்லை; மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்.தமிழக மீனவர்களின் வாழ்வாதார பிரச்னைகளையும் சொல்லியுள்ளோம். பாரம்பரிய மீன்பிடி பகுதிகளுக்கு மீன் பிடிக்கப் போகும் மீனவர் பிரச்னைக்கு, அடுத்த மாதம் கொழும்பில் நடக்கும் இரு நாடுகளின் கூட்டுக்குழு கூட்டத்தில் தீர்வு காண வேண்டும். இலங்கை புதிய அதிபரிடமும் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பிரதமரிடம் கேட்டுக் கொண்டேன்.இவ்வாறு முதல்வர் கூறினார்.பின், செய்தியாளர்கள் கேள்விகளுக்கு, முதல்வர் அளித்த பதில்: சந்திப்பின் போது, பிரதமர் மோடியின் அணுகுமுறை எவ்வாறு இருந்தது?அவர் பிரதமராக சந்தித்தார். நான் முதல்வராக சந்தித்தேன்; அவ்வளவு தான். நான் கூறியதை பொறுமையாக கேட்டார். சந்திப்புக்கு, 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டன. நாங்கள், 40 நிமிடங்கள் பேசினோம். இதிலிருந்து சந்திப்பு எப்படி இருந்திருக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.தமிழகத்தில் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கை எழுந்துள்ளதே?யார் கேட்டனரோ, அவர்களே விளக்கம் தந்து விட்டனர். ஊடகங்கள் தான் வேண்டுமென்றே திசை திருப்பி பெரிதுபடுத்துகின்றன.ஆட்சியில் பங்கு கேட்பதை, தங்கள் கட்சியின் கொள்கை என்று திருமா கூறுகிறாரே?அது கொள்கையாக இருக்கலாம். தொடர்ந்து சொல்லப்பட்டு கொண்டிருப்பது தான். புதிதாக ஒன்றும் சொல்லவில்லை.தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுகின்றனரே?பிரதமரிடம் அளித்த மனுவில் விளக்கி உள்ளோம். அமைச்சர் ஜெய்சங்கரிடமும் பேசியுள்ளோம். இலங்கையின் புதிய அதிபரிடம் பேசும்படி கூறியுள்ளோம். பிரதமரும் கலந்து பேசி கூறுவதாக தெரிவித்துள்ளார்.கச்சத் தீவை தி.மு.க., தாரைவார்த்தது தான் மீனவர் பிரச்னைக்கு காரணமா?தவறான கருத்தை கூற வேண்டாம். கச்சத் தீவை தருவதற்கு தி.மு.க., எதிர்ப்பு தெரிவித்தது. திரும்ப திரும்ப தவறான தகவலை பரப்ப வேண்டாம். கருணாநிதி எதிர்த்து பேசியுள்ளார். சட்டசபையிலும் பதிவுகள் உள்ளன. சட்டசபையில் தீர்மானமே போட்டுள்ளோம்.செந்தில் பாலாஜி ஜாமினில் வெளி வந்துஉள்ளது குறித்து?துணிச்சலோடு அவர் இருந்துள்ளார். அவரது துணிவை பாராட்டுகிறோம். கோர்ட்டில் போராடி, வழக்கில் இருந்து விடுதலை பெறுவார் என நம்பிக்கை உள்ளது; அவரும் நம்புகிறார்.மகிழ்ச்சியாக சந்திப்பு நடந்தது என்கிறீர்கள். மத்திய அரசின் செயல்பாடு அவ்வாறு உள்ளதா; தமிழகத்தின் உரிமைகள் காக்கப்படுகிறதா?நாங்கள் அவ்வப்போது எங்கள் கொள்கைகளை விட்டுத் தராமல், கோரிக்கைகளை சொல்லி வருகிறோம். கொள்கைகளை விட்டுத் தருவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறோம். இவ்வாறு ஸ்டாலின் பதில் அளித்தார்.

சோனியாவுடன் சந்திப்பு

பிரதமரை சந்தித்த பின், முதல்வர் ஸ்டாலின், டில்லியில் உள்ள தி.மு.க., அலுவலகத்திற்கு சென்று பார்வையிட்டார். பின், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாவை, அவரது இல்லத்தில் சந்தித்தார். அதைத் தொடர்ந்து, மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலர் சீதாராம் யெச்சூரி இல்லத்திற்கு சென்று, அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.-- நமது டில்லி நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 38 )

vns
செப் 28, 2024 21:10

15 நிமிடம் கதறி அழுதும் ஒன்றும் நடக்கவில்லை.அதனால் 25 நிமிடம் பிரதமரின் உதவியாளர்களிடமும் கதறவேண்டி வந்தது.


பேசும் தமிழன்
செப் 28, 2024 17:38

ஏற்கெனவே கொடுத்த நிதி எல்லாம் எங்கே போனது... அதற்க்கு முதலில் கணக்கு சொல்லுங்கள்.....இதை தான் நிர்மலா சீதாராமன் அவர்கள் முதலில் இருந்தே கேட்டு கொண்டு இருக்கிறார்.


Muralidharan S
செப் 28, 2024 17:00

மத்திய அரசு நிதி தராததால், ஆசிரியர்களுக்கு சம்பளம் குடுக்க நிதி இல்லை.. - ஆமாம், ஓட்டுக்காக... இலவசம், இலவசம் இலவசம் என்று மக்களை சோம்பேறியாக வைத்து இருக்கும் திட்டங்களை நிறுத்தினாலே போதும்.. எக்கச்சக்க நிதி இருக்கும்.. குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தை தரக்கூடிய, புதிய தேசிய கல்விக்கொள்கைகளை அமல்படுத்த என்ன அரசியல் ???. ஈகோ விட்டு ஒழித்து அமல்படுத்தி, நிதியையும் பெற்றுக்கொள்ளலாமே ...


Muralidharan S
செப் 28, 2024 16:54

செந்தில் பாலாஜி துணிச்சல் - எந்த துணிச்சலை பற்றி பேசுகிறார்கள். ? ஊழல் செய்யும் துணிச்சல், மக்களை ஏமாற்றும் துணிச்சல், சட்டத்தை ஏமாற்றும் துணிச்சல்.... ஒண்ணுமே புரியலே ...


Jysenn
செப் 28, 2024 16:27

Must have "Tolded" Modi the various steps taken by the government to honour the memory of karunanithi by installing statues, pens and monuments at the expense of billions of Rupees.


Sridhar
செப் 28, 2024 16:06

மெட்ரோ இரண்டாம் கட்ட விரிவாக்கம் மத்திய அரசின் திட்டமா, மாநில அரசின் திட்டமா? கடன் வாங்கும் சக்தி மாநிலத்துக்கு இல்லேன்னா, உடனே அதை மத்திய அரசு திட்டமாக மாற்ற கோரிக்கை விடுவிக்கவேண்டியதுதானே? அதுதான் நிதி அமைச்சரும் கோரிக்கை விடுத்தால் மத்திய அரசு அப்பணிகளை மேற்கொள்ளும் என்று உறுதி அளித்திருக்கிறார்களே? தெளிவாக செயல்படுவதை விட்டுவிட்டு ஏன் இந்த "tolded" வழி? அதேபோல், தேசிய பாடத்திட்டத்தை அமல் படுத்த முடியுமா முடியாதா? முடியாதென்றால், அந்த திட்டத்தின் நிதி மட்டும் கிடைக்கும் என்று எப்படி எதிர்பார்க்கலாம்? ஆனால், உண்மையில், இந்த விஷயங்கள் எல்லாம் வெறும் வெளிப்பார்வைக்குத்தான் என்றும், நிசமான கோரிக்கை பாரத் ரத்னாவுக்கு என்றும் பேசிக்கொள்கிறார்களே? தற்போதைய பாஜக போக்கை பார்த்தால் அந்த களங்கத்தையும் செய்ய தயங்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது. கட்டுமரம் ராவுல் இவர்களில் இன்று தேசத்துக்கு யார் பெரிய ஆபத்து என்கிற ரீதியில் இந்த விசயத்தை அணுகி, யார் யாருக்கெல்லாமோ கொடுக்கிறோம், இந்த ஆளுக்கும் கொடுத்துவைத்தால், அதனால் பெரும் பாதகம் ஒன்றும் இல்லை என்கிற ரீதியில் சிந்திப்பார்கள் என்று தோன்றுகிறது. தமிழக பாஜகவும் மக்களும் பலிகடாதான் ஒரு கடைய்ந்தெடுத்த ஊழல் பேர்வழி தமிழகத்தின் சரித்திர புருஷனாக வரலாறில் சித்தரிக்கப்படப்போகிறான் வருங்கால சந்ததியினரும் அந்த நபரை தமிழ்த்தந்தை என போற்றி புகழ் பாடி கொண்டாடப்போகிறார்கள் மக்களுக்கேற்ற தலைவன் அல்லது தலைவனுக்கேற்ற மக்கள் RIP தமிழகம்


M S RAGHUNATHAN
செப் 28, 2024 14:11

நீட் விலக்கு கேட்கவில்லை என்று தெரிகிறது. ஆகவே அந்த கொள்கை காற்றில் பறக்க விடப் பட்டாகி விட்டது. இனிமே நீட் பற்றி பேசுவீங்க?


Barakat Ali
செப் 28, 2024 13:45

காசு .... பணம் ..... துட்டு ..... மணி மணி ........


ManiK
செப் 28, 2024 11:53

இதுல காமெடி என்னதுன்னா இரண்டு பேருக்கும் age 70 . இரண்டில் ஒருவர் கருகருன்னு தலையோட நிற்கின்றார்.. மற்றொருவர் நாட்டுக்காக உழைத்து இப்போதே 80 மாதிரி தெரிகிறார்..!


theruvasagan
செப் 28, 2024 17:21

இயற்கையும் செயற்கையும் ஒன்றுகொன்று பக்கத்தில் இருந்தால் செயற்கை எடுப்பாகத் தெரியும். அது மட்டுமில்லை அது இயற்கை இல்லை என்பதும் அப்பட்டமாகத் தெரியும்.


xyzabc
செப் 28, 2024 11:48

கோவில் உண்டி பணம் கொள்ளை. வோட் எங்கு கிடைக்குமோ அங்கெல்லாம் பணத்தை வாரி இறைக்க வேண்டியது. பணத்திற்கு மாத்திரம் மத்திய அரசு. பணம் வந்த பின்னர் வஞ்சிப்பது. திராவிட அரசின் சாமர்த்தியம். கட்ச தீவை கொடுத்தது யார் ?


சமீபத்திய செய்தி