உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மகளிர் உரிமை தொகைக்காக மாநில அரசுகளின் செலவு ரூ.1.68 லட்சம் கோடி!

மகளிர் உரிமை தொகைக்காக மாநில அரசுகளின் செலவு ரூ.1.68 லட்சம் கோடி!

புதுடில்லி: நம் நாட்டில் மூன்று ஆண்டுகளுக்கு முன், மகளிர் உரிமைத்தொகை போன்ற நலத் திட்டங்களுக்கு இரு மாநிலங்கள் மட்டுமே செலவழித்த நிலையில், தற்போது 12 மாநிலங்களில் அத்தகைய திட்டம் விரிவடைந்து இருக்கிறது. இதன் மூலம் ஆண்டுக்கு 12 மாநிலங்களும், 1.68 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு செலவழிப்பதாக பி.ஆர்.எஸ்., சட்டசபை ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த செலவினங்களால் ஆறு மாநிலங்களில் இந்த ஆண்டு வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. நாடு முழுதும் உள்ள பெண் வாக்காளர்களை கவருவதற்காக, பிரத்யேக திட்டங்களை ஒவ்வொரு தேர்தலின்போதும் அரசியல் கட்சிகள் வாக்குறுதியாக அள்ளி விடுகின்றன. அந்த வகையில் தமிழகத்தில் தி.மு.க., தேர்தல் வாக்குறுதியாக தகுதியுள்ள மகளிருக்கு மாதந்தோறும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவித்தது. தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில், இந்த வாக்குறுதியை ஒவ்வொரு கட்டங்களாக நிறைவேற்றி வருகிறது. 12 மாநிலங்கள் அதே போல், மத்திய பிரதேசம், கர்நாடகா, மஹாராஷ்டிரா உட்பட தற்போது 12 மாநிலங்களில் மகளிரை மையப்படுத்தி நிபந்தனையற்ற பணப் பரிவர்த்தனை திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம், 12 மாநிலங்களுக்கும் சேர்த்து ஆண்டுக்கு, 1.68 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு நிதிச் சுமை ஏற்படுவதாக பி.ஆர்.எஸ்., சட்டசபை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அதன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2022 - 23 வரை மகளிரை மையப்படுத்தி நிபந்தனையற்ற பணப் பரிவர்த்தனை திட்டம் இரு மாநிலங்களில் மட்டுமே அமலில் இருந்தது. தற்போது, 2025-26ல் இத்தகைய திட்டங்கள் 12 மாநிலங்களுக்கு விரிவடைந்து இருக்கின்றன. வருவாய், வயது உள்ளிட்ட காரணிகள் அடிப்படையில் இத்தகைய திட்டங்களுக்கு முதன்மை யான பயனாளிகள் கண்டறியப்படுகின்றனர். அந்த வகையில் அசாம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள், மகளிருக்கான நிபந்தனையற்ற பணப் பரிவர்த்தனை திட்டத்துக்கான தொகை ஒதுக்கீட்டை கணிசமாக அதிகப்படுத்தியுள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அசாமில், 31 சதவீதமும், மேற்கு வங்கத்தில் 15 சதவீதமும் பயனாளிகளுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரித்துள்ளது. நிதிச்சுமை இந்த திட்டங்களால் மாநில அரசுகளின் பட்ஜெட்டில் கடும் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மகளிருக்கான திட்டங்களை செயல்படுத்திய, 12 மாநிலங்களில், தற்போது ஆறு மாநிலங்கள் நிதி நெருக்கடியால் தத்தளித்து வருகின்றன. உதாரணமாக கர்நாடக அரசின் மொத்த வருவாயில் இருந்து மகளிர் திட்டங்களுக்கான செலவினங்களை விலக்கினால், அதன் வருவாய் பற்றாக்குறை 0.6 சதவீதத்தில் இருந்து குறைந்து 0.3 சதவீத உபரி வருவாயாக மேம்படும். அதே போல் மத்திய பிரதேசத்தின் உபரியும் 0.4 சதவீதத்தில் இருந்து 1.1 சதவீதமாக மேம்படும். இந்த நிதிச் சுமைகளை கருத்தில் கொண்டு ஒரு சில மாநிலங்கள் மகளிர் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் செலவினங்களை குறைத்து வருகின்றன. சமீபத்தில் கூட மஹாராஷ்டிரா அரசு இந்த செலவினங்களை குறைக்க நடவடிக்கை எடுத்தது. ஆனால், ஜார்க்கண்ட் அரசோ மாதாந்திர கொடுப்பனவுகளை உயர்த்தியது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகளுக்கான மானியத் தொகை செலவினங்களை உயர்த்திக் கொண்டே செல்வது, பயன் உள்ள திட்டங்களுக்கு செலவு செய்ய முடியாத சூழலை ஏற்படுத்தி விடும் என ரிசர்வ் வங்கியும் சமீபத்தில் எச்சரித்திருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

அப்பாவி
நவ 06, 2025 18:47

ஆயிரம், ரெண்டாயிரத்துக்கு ஆசைப்பட்டு, லட்சம் கோடிகளை ஆட்டையப் போட விடுறாங்க.


V Venkatachalam, Chennai-87
நவ 06, 2025 17:46

சில கடைகளில் காலையில் கடை திறந்தவுடன் ஒரு பாத்திரத்தில் சில்லரை காசு போட்டு வைத்து விடுவார்கள். யாசகம் கேட்டு வருவோர்க்கு அந்த சில்லரை தட்டிலிருந்து காசு எடுத்து அவர்கள் கையில் வைத்திருக்கும் பாத்திரத்தில் போட்டு விடுவார்கள். கடை மூடும் வரை இந்த தானம் தினமும் நடை பெறும். டமில் நாட்டில் மகளிரை இந்த மாதிரி கேவலப்படுத்தி கூலா ஓட்டை திருடுறானுங்க இந்த அரசியல் சாக்கடைகள். வரி கட்டுபவர்களின் பணம் வீணடிக்கப்படுகிறது.


Sivak
நவ 06, 2025 13:52

இப்பல்லாம் குடிச்சிட்டு ரோட்ல விழுந்து கிடக்குற அளவுக்கு, குடிச்சிட்டு, போலீஸ்கிட்டயே அலப்பறை பண்ற அளவுக்கு பெண்கள் முன்னேற்றம் அடைச்சிருக்காங்க.. உரிமை தொகை தர வேண்டியது தான் ... ஆண்கள் என்ன பாவம் பண்ணாங்க ...


திகழ்ஓவியன்
நவ 06, 2025 12:54

1000 கொடுப்பதிற்கு ::மகளிர் உரிமை தொகைக்காக மாநில அரசுகளின் செலவு ரூ.1.68 லட்சம் கோடி அப்போ மோடி சொன்ன 2500 மாதம் கொடுத்தால் எவ்வளவு கோடி , இவர் கொடுத்தால் வளர்ச்சி , ஸ்டாலின் கொடுத்தால் தளர்ச்சி


Ramasamy
நவ 06, 2025 11:38

ஒட்டு வாங்க மட்டுமே இந்த திட்டம், அரசியல் வியாதிகளால் நாடு நாசம்


Modisha
நவ 06, 2025 10:19

திமுகவால் தொடங்கப்பட்டு தேசம் முழுதும் பரவிய வியாதி .


Chandru
நவ 06, 2025 09:53

The persons who evince much interest in taking free bus rides and. Rs. 1000 can only be called OC PONANGAL, NEED to be a bit harsh in the use of word with the only hope of making people realise their greediness which ultimately affects the State assembly a whole


c.k.sundar rao
நவ 06, 2025 09:26

The amount spent on freebies could have generated more labour hours of the same amount spent on improving road infrastructure, expanding water resources , desilting dams to augment water .


ஜெய்ஹிந்த்புரம்
நவ 06, 2025 08:23

இப்போது அமெரிக்காவில் தரப்படும் உணவு சலுகை பணம் SNAP or Food Stamps as normally known அதன் பட்ஜெட் அளவு $150 பில்லியன் 12 லட்சம் கோடி ரூபாய். இந்தியாவில் மோடி அரசின் பஞ்சம் குறைக்க ஆரம்பித்து இன்னும் தொடரும் PMGKAY திட்டத்தின் அளவு $25 பில்லியன். 2 லட்சம் கோடி ரூபாய். இவை எல்லாம் ஒரு வருட கணக்கு. மகளிர் உரிமைத் தொகை, அடுத்த தலைமுறையின் வளர்ச்சிக்கான உதவித் திட்டம்.


Modisha
நவ 06, 2025 11:30

மோடி கொடுத்தாலும் டிரம்ப் கொடுத்தாலும் இலவசம் ஆபத்து தான்.


Sivak
நவ 06, 2025 13:48

ஓட்டுக்கு இலவசம், உரிமை தொகை என்ற பேர்ல மக்கள் வரிப்பணத்தை லஞ்சமா கொடுக்கறாங்கன்னு சொன்னா.. அமெரிக்கான்னு சொல்ற.. பில்லியன் டாலர்னு சொல்ற.. மோடின்னு சொல்ற.. உனக்கு புரியற அளவுக்கு அறிவு இல்லையா இல்லை புரியாத மாதிரி நடிக்கிறியா ??


duruvasar
நவ 06, 2025 07:31

இலவசம் இல்லை லஞ்சம் பெண்களை லஞ்சத்தில் பங்குதாரராகிய பெருமை தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும். முதல்வர் பூரிப்பு அடைவதில் நியாயம் இருக்கிறது . இதுதான் திராவிடன் மாடல் .