உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் தொகுதி இழப்பதை ஏற்க முடியாது: காங்கிரஸ்

மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் தொகுதி இழப்பதை ஏற்க முடியாது: காங்கிரஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் தொகுதிகளை இழப்பதை ஏற்க முடியாது' என காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு இல்லாமல், தொகுதி மறுசீரமைப்பு செய்ய முடியாது. மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும்?தொகுதி மறுசீரமைப்பு அவசியமென்றாலும், மாநிலங்களின் பிரதிநிதித்துவம் எந்த வகையிலும் குறையக்கூடாது. மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் தொகுதிகளை இழப்பதை ஏற்க முடியாது. குடும்பக்கட்டுப்பாட்டில் வெற்றி பெற்ற மாநிலங்கள் தண்டிக்கப்பட உள்ளன. இது ஏற்றுக்கொள்ள முடியாதது. தொகுதி மறுசீரமைப்பால் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

Senthil Nathan
மார் 23, 2025 11:31

எந்த ஒரு கட்சியும் அப்படி ஒரு முடிவு எடுத்து தங்கள் சொந்த கட்சியின் வளர்ச்சியை கெடுத்து கொள்ள மாட்டார்கள். உங்களுக்கு அதை வைத்து அரசியலில் தாரை வார்க்க மாட்டார்கள். உங்கள் கட்சி தலைவர் போல பாஜக தலைவர்கள் இல்லை. விகிதாசாரம் தற்போது உள்ளதைப் போன்றே தொடர்ந்து இருக்கும் அதே சமயம் தொகுதிகள் எண்ணிக்கை உயரும் பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பகுதிகளுக்கு நாடாளுமன்றத்தில் இடம் ஒதுக்கி வைக்கப்படும். பொருத்திருந்து பாருங்கள் அனைத்து மாநிலங்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில் தான் தொகுதிகள் உயரும்


RAJAAMANI
மார் 23, 2025 08:22

நீங்கள் பார்ப்பதற்கு விஞ்ஞானி மாதிரி இருக்கிறீர்கள் நீங்கள் சிறந்த அறிவாளி உங்கள் பேச்சில் ஒரு தனித்துவம் உள்ளது நீங்கள் கர்நாடகாவுக்கு முதல்வராக ஆகக்கூடிய தகுதி உள்ளவர். நீங்கள் இருக்க வேண்டிய இடம் காங்கிரஸ் அல்ல.


சிட்டுக்குருவி
மார் 23, 2025 06:29

மக்கள் தொகை குறைந்திருப்பதாக எந்த ஒருமாநிலத்திலும் தரவுகள் இல்லை.மக்கள் தொகை கூடும் அளவு குறைந்திருப்பதே ஒழிய குறையவில்லை .முன்பெல்லாம் கூடுவது இருபது சதவீதமாக இருந்தது இப்போது சுமார் 10-15 சதவீதமாக குறைந்திருக்கின்றது தமிழ்நாட்டில் 2001 இல் இருந்தது 6 கோடி 2011 இல் 7 கோடி இப்போது அது 8 கோடியாக கணிக்கப்பட்டிருக்கின்றது அதனால் அரசு தரவுகள் ஏதுமின்றி பொய்ப்பிரசாரங்கள் செய்வது மடைமாற்றம் தான் .மக்களை திசை திருப்பும் வேலையே .ஏற்கனவே 1973இல் இது சார்ந்த சட்டம் இயற்றப்பட்டிருக்கின்றது அவர்களுக்கு தெரியாமல் இருப்பதற்ற்கில்லை .


vbs manian
மார் 22, 2025 21:50

சார் உங்களுக்கு யார் சொன்னாங்க. நீங்களுமா இப்படி. உங்கள் தலைவர் மக்கள் தொகைக்கு ஏற்ப உரிமை வழங்க வேண்டும் என்று சொல்கிறார். ஜித்னா aapathi உத்தனா ஹக்.


Padmasridharan
மார் 22, 2025 21:48

மக்கள் தொகை கட்டுப்படுத்தி விவாகரத்துக்கள் அதிகமாகி இருக்கிறதே.. மக்கள் தொகையில் divorcees & single mothers எண்ணிக்கையை கனெக்கெடுப்பார்களா சாமியோவ்


visu
மார் 22, 2025 21:08

அப்ப மக்கள் தொகையை கட்டுப்படுத்தாத மாநிலங்களுக்கு கட்டாய குடும்பக்கட்டுப்பாடு திட்டம் அறிவியுங்க இல்ல நாடு முழுதும் 2 க்கு மேல் கூடாது என்று சட்டம் போடுங்க 2 க்கு எல் பெறுவோர் அரசு வேலை பெற முடியாது அரசு சலுகைகள் கிடையாது என்று சொல்லுங்க MLA க்கு கூட நிற்க முடியாது சொல்லுங்க அதை விட்டு மக்களை தண்டிப்பது என்ன நியாயம்


Nandakumar Naidu.
மார் 22, 2025 20:34

ஹிந்துக்களின் மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதே ஹிந்து விரோத கட்சியான நீங்கள் தான..?


Appa V
மார் 22, 2025 19:44

54 லட்சம் இந்தியர்கள் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டனர் ..மற்ற ஐரோப்பிய ஆப்பிரிக்க நாடுகளில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் இருக்கலாம் ..குருட்டு பூனை விட்டத்தில் பாய்தது போல எந்த டேட்டாவும் இல்லாமல் இவர்களின் மணலில் கயிறு திரிக்கும் வேலை மக்களிடம் எடுபடாது


Visu
மார் 22, 2025 19:01

மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி வரையறைன்னு சொன்ன பப்புவிடம் என்ன சொல்ல போறீங்க


தாமரை மலர்கிறது
மார் 22, 2025 18:50

குழந்தை பெற்றால், படிக்க வைக்கணும், சோறு போடணும், செலவு பண்ணனும்னு தான் சொகுசா வாழ்வதற்காக சுயநலமாக தென் இந்திய மக்கள் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்ளாமல் குடும்பக்கட்டுப்பாடு செய்துகொண்டால், அதற்கு மத்திய அரசு எப்படி பொறுப்பாகும்? தென்னிந்தியர்கள் 26 சதவீதத்திலிருந்து 19 சதவீதமாக குறைந்துவிட்டார்கள். அதற்கு ஏற்றபடி தான் சீட்கள் ஒதுக்க முடியும். வடஇந்தியாவில் காங்கிரஸ் ஜெயிக்க முடியாது. தமிழகத்தில் ஸ்டாலின் முதுகில் சவாரி செய்யலாம். வடஇந்தியாவில் பிஜேபி எளிதாக ஜெயித்து மெஜாரிட்டி வந்துவிடும் என்ற பயம் நடுக்கம் ஜெயராம் ரமேஷின் முகத்தில் தெரிகிறது. இனி ஒருபோதும் அமைச்சர் ஆகமுடியாது என்ற பயத்தில் உளறுகிறார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை