உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விமானத்தில் பறந்து பறந்து திருடி சொந்த கார், ‛பிளாட் என சொகுசு வாழ்க்கை: பலே திருடன் கைது

விமானத்தில் பறந்து பறந்து திருடி சொந்த கார், ‛பிளாட் என சொகுசு வாழ்க்கை: பலே திருடன் கைது

ஆமதாபாத்: ரூ.1 லட்சம் திருட்டு தொடர்பான வழக்கில் கைதான திருடன், மும்பையில் சொந்தமாக ‛ பிளாட்' வாங்கி குடியிருந்ததும், ‛ ஆடி ' கார் வைத்திருப்பதுடன் விமானத்தில் சென்று பல்வேறு மாநிலங்களில் திருட்டில் ஈடுபட்டதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது

குஜராத் மாநிலம் வாபி நகரில் ரூ.1 லட்சம் திருட்டு தொடர்பான வழக்கை விசாரித்த வால்சாத் போலீசார், மும்பையில் வசிக்கும் கனுபாய் சோலங்கி என்பவரை கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

19 வழக்குகள்

இது தொடர்பாக போலீசார் கூறியதாவது: கனுபாய் சோலங்கி, மஹாராஷ்டிர மாநிலம் மும்பையின் மும்ப்ரா பகுதியில் ரூ.1 கோடி மதிப்புள்ள வீட்டில் வசித்து வருகிறார். அவரிடம் ‛ ஆடி ' கார் ஒன்றும் உள்ளது. குஜராத் மட்டுமல்லாமல், தெலுங்கானா, ஆந்திரா, ம.பி., மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் திருட்டுகளில் ஈடுபட்டு உள்ளார். 19 திருட்டு வழக்குகள் அவர் மீது உள்ளன. முஸ்லிம் மதத்தை சேர்ந்த பெண் ஒருவரை, தனது பெயரை மாற்றி சொல்லி திருமணம் செய்துள்ளார்.

போதைக்கு அடிமை

வெளிமாநிலங்களுக்கு திருட்டில் ஈடுபட செல்லும் சோலங்கி, அங்கு செல்வதற்கு விமானத்தில் பயணித்துள்ளார். அந்த மாநிலங்களில் சொகுசு ஓட்டலில் தங்கும் அவர், ஓட்டல் கார் மூலம் பயணித்துள்ளார். திருட்டில் ஈடுபடுவதற்கு முன் பகல் நேரங்களில், சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று உளவு பார்த்து வந்துள்ளார். மும்பையில் இரவு நேர விடுதிகள், நடன விடுதிகளில் இரவு பொழுதை செலவிட்ட சோலங்கி, போதைக்கு அடிமை ஆகி உள்ளார். இதற்காக மாதம் ரூ.1.50 லட்சம் செலவு செய்துள்ளார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Subash BV
ஜூலை 07, 2024 19:01

This is becoming standard. WITHOUT COPS KNOWLEDGE NOTHING WILL HAPPEN. MAIN REASON BRIBES. PUT THE BHARAT FIRST.


Azar Mufeen
ஜூலை 07, 2024 07:51

பாஜக, திமுக கட்சியில் சேர்வதற்கு தகுதி நிறைய இருக்கிறது


Sathyanarayanan Sathyasekaren
ஜூலை 07, 2024 23:00

பிஜேபி யை குறை சொல்லும் முன் உன் சமூத்தை சேர்ந்தவர்கள் செய்யும் கடத்தல் தொழிலை நிறுத்த முடியுமா பார். முதலில் ஊழல் செய்து ஊரை கொள்ளை அடித்த கான் ஸ்கேம் போலி காந்தி குடும்பத்திற்கு சொம்பு தூக்குவதை நிறுத்துங்கள், பப்பு சொன்னான் என்று அவனுக்கு வோட்ட போட்டுவிட்டு உங்கள் முக்காடு போட்ட பெண்கள் காங்கிரஸ் அலுவலக வாசலில் வரிசையில் நின்றதை பார்த்து உலகமே சிரிக்கிறது. அவ்வளவு முட்டளாகவே இருப்பீர்கள்? நாலு பொண்டாட்டி நாற்பது பெற்றது என்றல் இப்படி இலவசத்திற்க்காக வரிசையில் நிற்கவேண்டியது தான். என்று திருந்துவீர்கள்?


J.V. Iyer
ஜூலை 06, 2024 21:50

திராவிட கொத்தடிமைகள் எங்கும் பரவி உள்ளனர்.


venugopal s
ஜூலை 06, 2024 21:06

இவரை வட மாநிலத் திருடன் என்று சொன்னால் சங்கிகளுக்கு கோபம் வந்து விடுமே! சோலங்கி என்ற பெயரும் குஜராத்லிகளின் பெயர் தான், அதனால் குஜராத்தி திருடன் என்று சொல்லலாமா?


Mohan
ஜூலை 07, 2024 09:09

தமிழ் நாட்டில் திருடினாலும், ஊழல் பண்ணாலும் திருடன் தான், வட மாநிலத்தில் திருடினாலும் ஊழல் பண்ணாலும் திருடன் தான்.


Kumar Kumzi
ஜூலை 06, 2024 19:42

விடியலின் திமுக மாடல் பாணியில் திருடியிருக்கான்


Mahendran Puru
ஜூலை 06, 2024 23:32

ஆனால் அவன் குஜராத்தி. இது எப்படி இருக்கு.


ராமகிருஷ்ணன்
ஜூலை 06, 2024 17:40

திமுக கவுன்சிலர்களின் அல்லக்கைகள் இவனை விட சொகுசா வாழ்கிறார்கள்.


D.Ambujavalli
ஜூலை 06, 2024 16:34

இவ்வளவு விலாவாரியாக தெரிந்து கதை சொல்பவர்கள் அந்த 19 வழக்கில் ஒன்றில் கூடக் கைது செய்யவில்லையே


Lion Drsekar
ஜூலை 06, 2024 16:33

இரண்டு தொழில்கள்தான் மிகப்பெரிய வருமானம் கொட்டும் தொழில் ஒன்று இந்த தொழில் மற்றொன்று அரசியல் . இருவருக்கும் மட்டுமே அரசாங்கங்கள் இயங்குகின்றன காவல், நீதித்துறை . வந்தே மாதரம்


ஆரூர் ரங்
ஜூலை 06, 2024 16:15

ஆனா ஆரம்பத்தில ரயில் கழிவறையில பயணம் செஞ்சிருப்பான்.


subramanian
ஜூலை 06, 2024 16:01

போதைக்கு அடிமையாகி விட்ட இவனுங்க திருந்தவே மாட்டான். இருப்பினும் இவனுக்கு மனம் திருந்த சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.


மேலும் செய்திகள்