உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகையை வழங்க நடவடிக்கை

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகையை வழங்க நடவடிக்கை

பெலகாவி; “கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய, நிலுவை தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,” என, மாநில சர்க்கரை துறை அமைச்சர் சிவானந்த் பாட்டீல் கூறினார்.கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் நிலுவை தொகை வழங்குவது தொடர்பாக, பா.ஜ., உறுப்பினர் ரவிகுமார் எழுப்பிய கேள்விக்கு, சர்க்கரை துறை அமைச்சர் சிவானந்த் பாட்டீல் அளித்த பதில்:கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்காத காரணத்தால் சில தற்கொலைகள் நடந்துள்ளன. இதுகுறித்து கர்நாடக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம், கரும்பு வளர்ச்சி மற்றும் சர்க்கரை துறைக்கு சரியான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.கடந்த 2018 - 2019ம் ஆண்டை பொருத்தமட்டில் மூன்று சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு 3.94 கோடி ரூபாய் தொகை பாக்கி வைத்திருந்தது. கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.நடப்பு நிதியாண்டில் மாநிலத்தில் உள்ள சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு, தொழிற்சாலைகளால் வழங்கப்பட வேண்டிய நியாயமான மற்றும் லாபகரமான விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை