உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது: உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது: உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறப்பதற்கு அனுமதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், பாதுகாப்பை கவனத்தில் கொண்டு ஆலையில் செயல்பாடுகளை மீண்டும் துவங்குவதற்கான பரிந்துரைகளை வழங்க நிபுணர் குழு ஒன்றை அமைத்து இருந்தது.இந்நிலையில், இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ‛‛ ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க அனுமதிக்க முடியாது. தூத்துக்குடி மக்களின் ஆரோக்கியம் மற்றும் நலன் பாதுகாக்கப்பட வேண்டும். சாமானிய மக்கள் நேரடியாக உச்சநீதிமன்றம் வரை வர முடியாது என்றாலும், அவர்களது கவலையை புறந்தள்ள முடியாது. தமிழக அரசின் ஆட்சேபனைகளையும் சந்தேகங்களையும் நீதிமன்றம் புறந்தள்ள முடியாது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுத்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தவறு எனக்கூற முடியாது என தெரிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ