உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ., பிரசாரத்தில் கல்வீச்சு: முன்னாள் எம்.பி., மீது தாக்குதல்

பா.ஜ., பிரசாரத்தில் கல்வீச்சு: முன்னாள் எம்.பி., மீது தாக்குதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அமராவதி: மஹாராஷ்டிராவில் பா.ஜ., தேர்தல் பிரசாரத்தில் மோதல் ஏற்பட்டதையடுத்து, அக்கட்சியின் முன்னாள் எம்.பி., நவ்நீத் கவுர் ராணா மீது நாற்காலிகள் வீசப்பட்டன.மஹாராஷ்டிராவில் உள்ள 288 சட்டசபை தொகுதிகளுக்கு நாளை மறுநாள் தேர்தல் நடக்கிறது. இன்றுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைய உள்ளதால், அரசியல் கட்சியினர் இறுதிகட்ட ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அமராவதி மாவட்டத்தில் உள்ள தர்யாபூர் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் ரமேஷ் பண்டிலேவுக்கு ஆதரவாக, அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி., நவ்நீத் கவுர் ராணா நேற்று பிரசாரம் மேற்கொண்டார். கல்லார் கிராமத்தில் பா.ஜ.,வினர் புடைசூழ, அவர் பேரணியாக சென்று வீதி வீதியாக ஓட்டுகள் சேகரித்தார்.அப்போது, அப்பகுதியில் இருந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பியதாக கூறப்படுகிறது. இதற்கு பா.ஜ.,வினரும் பதிலடி கொடுத்ததை அடுத்து, இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது.இதையடுத்து, பிரசார கூட்டத்துக்காக போடப்பட்டிருந்த நாற்காலிகளை எடுத்து இரு தரப்பினரும் வீசிக் கொண்டனர். முன்னாள் எம்.பி., நவ்நீத் கவுரை குறிவைத்தும் நாற்காலிகள் வீசப்பட்டன. இதையடுத்து, அவருடன் வந்த பாதுகாவலர்கள் அவரை பத்திரமாக அழைத்துச் சென்றனர்.இருப்பினும், அவர் சென்ற பாதையில் ஒரு சிலர் தொடர்ந்து நாற்காலிகளை வீசியபடியே இருந்ததால், அதிர்ச்சி அடைந்த பா.ஜ.,வினர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், மோதலில் ஈடுபட்டவர்களை தடுத்து கலைந்து போகும்படி செய்தனர். அப்பகுதியில் இருந்து சென்ற நவ்நீத் கவுர், கல்லார் போலீசில் புகாரளித்தார். அதில், 'கல்லாரில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டபோது, அங்கிருந்த சிலர் அநாகரிகமான செய்கைகள் மற்றும் கூச்சல்களை எழுப்பினர். அதைத் தொடர்ந்து எங்கள் மீது நாற்காலிகளை வீசினர். அதில், ஒரு சிலர் என்மீது எச்சில் துப்பினர். 'உடன் வந்த பாதுகாவலர்கள் என்னை காப்பாற்றினர். எங்களைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், ஒட்டுமொத்த ஹிந்து சமூகமும் அமராவதியில் கூடும்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Tetra
நவ 18, 2024 16:29

முகமதியர்கள் என்று சொல்ல பயமா?


Amruta Putran
நவ 18, 2024 11:08

Arabic slaves ?


MADHAVAN
நவ 18, 2024 10:53

இந்தமாதிரி கூட இப்போவெல்லாம் இந்து இந்து னு பீத்திக்கிறா


Barakat Ali
நவ 18, 2024 09:31

என்னது? பாஜக மோடியின் செல்வாக்கை நம்பாமல் நடிகையை நம்புதா??


Duruvesan
நவ 18, 2024 07:50

இது நாடு முழுவதும் தொடரும், பிஜேபிக்கு முடிவுரை எழுத தயார் ஆகிய மக்கள்


Duruvesan
நவ 18, 2024 07:23

மக்களின் கோவத்தின் வெளிப்பாடு. பிஜேபிக்கு 30 சீட் கெடச்சா பெரிசு


வாய்மையே வெல்லும்
நவ 18, 2024 08:38

கான் க்ராஸ் விசகிருமி கட்சி . ரோஹிண்யாக்கள் அநேகர் உள்ளெ புகுந்து விட்டனர். தக்கபதிலடி கொடுத்தால் ஓடிஒளியுவார்கள்


ராமசாமிநாடார்,தேனி
நவ 18, 2024 18:24

அது மக்களின் வெளிப்பாடு அல்ல மூர்க்க முல்லாக்களின் வெளிப்பாடு.


பேசும் தமிழன்
நவ 18, 2024 00:28

இத்தாலி திருட்டு கான் கிராஸ் கும்பல் தோல்வி பயத்தில் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை