கர்நாடக அரசு பஸ்கள் மீது ஹைதராபாதில் கல்வீச்சு
இரண்டு கர்நாடக அரசு பஸ்கள் மீது, ஹைதராபாதில் கல்வீசப்பட்டு உள்ளது.கே.எஸ்.ஆர்.டி.சி., எனும் கர்நாடக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் அண்டை மாநிலங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.நேற்று முன்தினம் இரவு ஹைதராபாதில் இருந்து பெங்களூருக்கு கே.எஸ்.ஆர்.டி.சி.,யின் ஐராவத் வகுப்பு, அம்பாரி உத்சவ் பஸ்கள் வந்து கொண்டு இருந்தன.ஹைதராபாத் அருகே ஷம்சாபாத் என்ற இடத்தில் பஸ்கள் வந்தபோது, இரண்டு பஸ்கள் மீதும் மர்ம நபர்கள் கல்வீசி தாக்கினர். இதில் கண்ணாடிகள் உடைந்தன. அதிர்ஷ்டவசமாக பயணியருக்கு காயம் ஏற்படவில்லை.கல் வீசப்பட்டது பற்றி ஷம்சாபாத் போலீசார் விசாரிக்கின்றனர் - நமது நிருபர் -.