உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கெஜ்ரிவால் கார் மீது கல்வீச்சு

கெஜ்ரிவால் கார் மீது கல்வீச்சு

புதுடில்லி, டில்லியில் முதல்வர் ஆதிஷி தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், மொத்தம் உள்ள 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் பிப்ரவரி 5ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஆம் ஆத்மி, காங்கிரஸ், பா.ஜ., உள்ளிட்ட கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டில்லி முன்னாள் முதல்வருமான கெஜ்ரிவால், தான் போட்டியிட உள்ள புதுடில்லி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது கெஜ்ரிவாலை குறிவைத்து, அவர் சென்ற கருப்பு நிற சொகுசு காரின் மீது மர்ம நபர்கள் கற்களை வீசியதாக கூறப்படுகிறது. உடனே, அருகில் இருந்த போலீசார் சம்பவ இடத்தில் இருந்து கெஜ்ரிவால் சென்ற காரை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். இந்த தாக்குதலுக்கு பா.ஜ.,வினர் தான் காரணம் என, ஆம் ஆத்மியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

வாடகை வீடுகளில்

வசிப்போருக்கு 'ஜாக்பாட்'ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “டில்லியில் உள்ள பெரும்பாலான வாடகை வீடுகளில் வசிப்பவர்கள் பூர்வாஞ்சல் பகுதிகளை சேர்ந்த ஏழை மக்களே. அவர்களுக்கு டில்லி அரசின் நலத்திட்டங்கள் சென்றடையாததால், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதை கருத்தில் கொண்டு, டில்லியில் ஆம் ஆத்மி அரசு மீண்டும் ஆட்சி அமைத்தால், வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கும் அரசின் நலத்திட்டங்கள் சென்றடைய வழிவகுக்கும்,” என்றார். பூர்வாஞ்சல் பகுதி என்பது உத்தர பிரதேசத்தின் கிழக்கு, பீஹார் மாநிலங்களைச் சேர்ந்த மக்களை குறிக்கும் பகுதி. இவர்களில் பலர் டில்லியில் ஓட்டுரிமை பெற்றுள்ளதால், அவர்களின் ஓட்டுகளை குறிவைத்து இத்தகைய அறிவிப்பை கெஜ்ரிவால் வெளியிட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் விமர்சித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ