உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தாக்கப்போகுது காந்தப்புயல்; செயற்கைக்கோள்கள் என்னாகுமோ; நாசா சொல்வது இதுதான்!

தாக்கப்போகுது காந்தப்புயல்; செயற்கைக்கோள்கள் என்னாகுமோ; நாசா சொல்வது இதுதான்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சூரியனில் இருந்து உண்டாகும் காந்தப்புயல், செயற்கைக்கோள்களை தாக்கும் வாய்ப்புள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.கடந்த 2010ம் ஆண்டு முதல் சூரியனை, நாசாவின் சோலார் டைனமிக்ஸ் அப்சர்வேட்டரி (Solar Dynamics Observatory) என்ற செயற்கைகோள் கண்காணித்து வருகிறது. இந்த செயற்கைகோள் தான் ஒரு மிகப்பெரிய சூரிய வெடிப்பை படம் பிடித்து பூமிக்கு அனுப்பி உள்ளது. இந்த வெடிப்பை, ஆராய்சியாளர்கள் X9.1 வகையை சார்ந்தது என்கிறார்கள். அக்டோபர் 1ம் தேதி, AR3842 என்ற சூரியப் புள்ளியிலிருந்து X7.1 அளவு கொண்ட சக்திவாய்ந்த ஒரு வெடிப்புத் தோன்றியது. அதை விஞ்ஞானிகள் கண்காணித்து வரும் நிலையில், தற்போது மீண்டும் அதே சூரிய புள்ளியிலிருந்து மீண்டும் X9.05 அளவுக்கொண்ட அதிக சக்தி வாய்ந்த வெடிப்பு ஒன்று தோன்றியுள்ளது. இந்த வெடிப்பினால் ஏற்பட்ட கதிர்வீச்சு ஆப்பிரிக்க நாடுகளில், ரேடியோ அலைகளில் அரை மணி நேரம் பாதிப்பை ஏற்படுத்தியது. ஹேம் ரேடியோ ஆப்ரேட்டர்கள் 30 நிமிடம் சிக்னல் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தனர். அதேபோன்று இன்றும் (அக்.,05) சூரிய வெடிப்பினால் உண்டாகும் கதிர் வீச்சு, பூமியை தாக்கக்கூடும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். இதன் மூலம் செயற்கைக்கோள்கள் மட்டுமின்றி, விண்வெளியாக கிரிட்டுகளும் பாதிக்கப்படலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Lion Drsekar
அக் 06, 2024 15:14

மாட்டுக்காரருக்கு மாட்டின் மீது மட்டுமே எண்ணம் இருக்கும், உப்பளம் நடத்திவருபவர்களுக்கு மேகத்தின் மீதே எண்ணம் இருக்கும், அரசியல் கட்சிகளுக்கு கட்டிடம் கட்டுதல், சாலை போடுதல், குடிநீர் ஆதாரங்களில் வளர்க்கப்பட்ட செடிகளை அகற்றுவதிலில் கவனம், இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எண்ணம் இருக்கும், பாவம் இவர்களுக்கு செயற்கைகோள்கள் மீது தாக்கம், ஒன்றை எல்லோரும் புரிந்துகொள்ளவேண்டும் , நேர்மையாக வாழ்பவர்கள் யாருமே தங்களை அந்த இறைவன் எதற்க்காக இன்னமும் வைத்திருக்கிறான் என்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பேசாத இடங்களே இல்லை என்று கூறலாம், அந்த அளவுக்கு மனமகிழ்ச்சியுடன் வாழும் சூழ்நிலையில் இன்றைய காலத்தின் கோலம், இப்படி இருக்க செயற்கைகோள்கள் ..... என்ன என்ற நிலையைத் தாண்டிவிட்டது இருந்தாலும் பாவம் நீங்கள் ஒரு துறையாவது உங்கள் தொழிலில் பாசத்தை வைத்து கடமையை செய்வவனே செய்கிறீர்கள் , உங்களுக்கு பாராட்டுக்கள், உங்கள் கவலையை இயற்க்கை அன்னை காப்பாற்றுவாள், வந்தே மாதரம்


Srinivasan Krishnamoorthi
அக் 05, 2024 10:50

இது போல மஹாபாரத காலத்திலிருந்து சூரிய வெடிப்புகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. பூமியின் அடியில் இருந்து ஆயில் வாயு எடுத்து சேதம் ஆகும் உள்ளிடங்களின் மேல்பரப்பில் சூரிய வெடிப்பின் தாக்கம் இருக்கலாம். குறிப்பு: NASA முதிர் விஞ்ஞானிகள் பலர் வேதத்தில் சொல்லப்பட்ட சில சூத்திரங்களை ஆதாரமாக வைத்து பல வான் ஆராய்ச்சிகள் செய்வதாக கூறியுள்ளனர். எனவேமற்ற படி NASA கூறும் அளவு ஆபத்தான நிலை ஏற்பட வாய்ப்பு குறைவு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை