மேலும் செய்திகள்
ஆற்றில் மாயமான மாணவன் உடல் மீட்பு
27-Jun-2025
பாலக்காடு; பாலக்காடு அருகே, ஆற்று நீரில் மூழ்கி பள்ளி மாணவி உயிரிழந்தார்.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம்,கடம்பழிபுரம் பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார்- -- சவுமியா தம்பதியரின் மகள் சிவானி, 14. அப்பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வந்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம்மாலை, 5:30 மணிக்கு, வீட்டின் அருகே உள்ள ஆற்றை பார்க்க, சிவானி தோழியுடன் சென்றனர். அப்போது சிவானி, கால் தவறி பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் விழுந்து மூழ்கினர். இதை கண்ட தோழியின் அலறல் சப்தம் கேட்டு ஓடி வந்த, அப்பகுதி மக்கள் நீண்ட நேர தேடுதலுக்கு பின் சிவானியின் உடலை மீட்டனர்.தகவல் அறிந்து வந்த, செர்ப்புளச்சேரி போலீசார், சிவானியின் உடலை பிரேத பரிசோதனைக்காக மண்ணார்க்காடு தாலுகா மருத்துவமனைக்கு அனுப்பினர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
27-Jun-2025