உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போலீஸ் தேர்வுக்கு பயிற்சி பெற்ற மாணவி சுருண்டு விழுந்து பலி

போலீஸ் தேர்வுக்கு பயிற்சி பெற்ற மாணவி சுருண்டு விழுந்து பலி

திருவனந்தபுரம்: போலீஸ் உடல் தகுதி தேர்வுக்காக உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த இளம் பெண், மைதானத்தில் ஓடிய போது சுருண்டு விழுந்து இறந்தார். கேரள மாநிலம், திருச்சூர் அருகே தளிக்குளத்தை சேர்ந்தவர் சுரேஷ். ஆட்டோ ஓட்டுநர். இவரது மகள் ஆதித்யா, 22. பட்டதாரியான இவர் போலீஸ் வேலைக்கு நடைபெற்ற எழுத்து தேர்வில் வெற்றி பெற்றார். தொடர்ந்து உடல் தகுதி தேர்வுக்காக தயாராகி வந்தார். தினமும் ஓட்டப்பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் மேற்கொண்டு வந்தார். நேற்று முன்தினம், அவர் தளிக்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் ஓட்ட பயிற்சியில் ஈடுபட்ட போது, திடீரென சுருண்டு விழுந்தார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்க ள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவர் மாரடைப்பு ஏற்பட்டு இருந்திருக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
அக் 29, 2025 08:37

ஒரு இளம் மாணவியின் உயிர் பலி ஏற்கமுடியாதது. அந்த மாணவி போலீஸ் வேலை கிடைக்கப்பெற்று என்னவெல்லாம் சாதிக்க நினைத்தாளோ... எல்லாம் போச்சு. மாணவியின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்.


முக்கிய வீடியோ