| ADDED : நவ 14, 2024 09:27 PM
ஆனந்த் விஹார்: பள்ளி பேருந்திலேயே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாள்.காஜியாபாத் இந்திரா புரத்தைச் சேர்ந்த சிறுமி, ஷாஹ்தராவின் ஆனந்த் விஹார் பகுதி பள்ளியில் படித்து வந்தாள். வீட்டில் இருந்து பள்ளிப் பேருந்தில் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம்.பள்ளிச் சிறுமியை பேருந்திலேயே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம், தாமதமாக வெளி வந்தது. சிறுமியை பேருந்தின் ஓட்டுனர், உதவியாளர், பள்ளிப் பணியாளர் ஆகிய மூவரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.இந்த கொடுமை குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் எந்த புகாரும் அளிக்க முன்வரவில்லை. பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார், சம்பந்தப்பட்ட மூவர் மீதும் போலீசார், 'போக்சோ' வழக்குப் பதிவு செய்துள்ளனர்.குற்றச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரிடம் போலீசார் பேசி வருகின்றனர். சம்பவம் நடந்த தேதி, மாணவியின் வயது உள்ளிட்ட எந்த விபரங்களையும் போலீசார் வெளியிடவில்லை.