உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேரளாவில் முதலாம் ஆண்டு மாணவருக்கு நேர்ந்த கொடூரம்: ஆளுங்கட்சி மாணவ அமைப்பினர் அட்டூழியம்

கேரளாவில் முதலாம் ஆண்டு மாணவருக்கு நேர்ந்த கொடூரம்: ஆளுங்கட்சி மாணவ அமைப்பினர் அட்டூழியம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: கேரளாவில் முதலாம் ஆண்டு மாணவரை தாக்கி கொடுமைப்படுத்தியதாக ஆளுங்கட்சி மாணவர் சங்கத்தை(எஸ்எப்ஐ) சேர்ந்தவர் மீது புகார் கூறப்பட்டு உள்ளது. இதனையடுத்து ஏழு மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கரியவட்டம் அரசு கல்லூரி உள்ளது. இங்கு கடந்த 11ம் தேதி முதலாம் ஆண்டு மற்றும் சீனியர் மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவருக்கு காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் கோபம் அடைந்த எஸ்எப்ஐ அமைப்பைச் சேர்ந்தவர்கள், கல்லூரி விடுதிக்குள்நுழைந்து புகார் அளித்த மாணவனை தேடி உள்ளனர். இதில் அந்த மாணவன் கிடைக்கவில்லைஅறையில் இருந்த ஒரு மாணவனை, தங்களது சங்கத்தின் செயல்பாடுகளுக்கு பயன்படுத்தப்படும் அறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அந்த மாணவனை தாக்கியதுடன் நீண்ட நேரம் முட்டிப்போ வைத்துள்ளனர். அந்த மாணவன் குடிக்க தண்ணீர் கேட்ட போது, பாட்டிலில் தண்ணீர் எடுத்து வந்து அதில் எச்சில் துப்பி குடிக்கச் செய்தனர். இதனை குடிக்க மறுத்ததால் கடுமையாக தாக்கி உள்ளனர்.பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை போலீசிலும், ராகிங் எதிர்ப்புக் குழுவிலும் புகார் அளித்தார். இக்குழுவினர்,கல்லூரியில் இருந்த சிசிடிவிக்களை ஆய்வு செய்தனர். தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக ஏழு மாணவர்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர். போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
பிப் 19, 2025 17:00

கேரளம் தமிழகம் இலங்கை வடபகுதி இலட்சத்தீவு இவைகளை இணைத்து புதிய நாடு உருவாக்க அப்போதைய தீவிர வாதி விடுதலை புலிகள் தலைவர் மதிப்பிற்குரிய மாண்புமிகு திரு பிரபாகரன் தலைமையில் முடிவு செய்து வைத்திருந்தனர். அதன் எதிரொலி தான் உலகின் முதல் மனித வெடி குண்டு மூலம் அப்போதைய பிரதமர் திரு.ராஜீவ் கொலை. இந்த திராவிடர் மாடல் பேச்சை நம்பி விடுதலை புலிகளுக்கு ஆதரவாக நான் கல்லூரியில் படிக்கும் போது போராட்டம் செய்தோம். கோவை விமான நிலையத்தை முற்றுகை இட்டு விமானங்கள் இயங்காதவாறு மறியல் போராட்டம் செய்தோம். காவல் துறை பேச்சு வார்த்தைக்கு பின்னர் பல மணி நேரத்திற்கு பின்னர் விமானத்தில் இலங்கை அரசை கண்டித்து கையால் எழுதிய போஸ்டர் விமானத்தில் ஒட்டி விமானம் பறக்க அனுமதித்தது போராட்டம் முடித்தோம். நாங்கள் தான் இப்படி செய்தோம் என்றால் எங்கள் பக்கத்து கல்லூரி மாணவர்கள் இரயில் மறியல் போராட்டம் ஹோப் காலேஜ் பகுதியில் செய்தார்கள். இப்போது கூட இந்த போதை மருந்து கடத்தல் போன்ற தொழில் செய்து தீவிர வாத செயல் புரிந்தவர்களுக்காக போராடியதை என்னி பல நாட்கள் வருந்தியுள்ளேன். இந்த நாசகார சக்திகளுக்கு துணை போனதற்காக. இப்போது கூட இந்த கேவலமான செயல் செய்ததற்கு என்றைக்கும் எனக்கு மன்னிப்பே கிடைக்காது.


vns
மார் 26, 2025 11:43

இன்னமும் மதிப்பிற்குரிய மாண்பிமிகு திரு??


கத்தரிக்காய் வியாபாரி
பிப் 19, 2025 13:39

திராவிடம் தழைத்தோங்கி வளர்ந்து உள்ளது.


Kasimani Baskaran
பிப் 19, 2025 13:23

இளைய மாணவர்களை கெளரவத்துடன் நடத்த வேண்டும். ஆனால் காட்டுமிராண்டிகள் எப்படி நன்றாக நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கலாம்..


naranam
பிப் 19, 2025 13:14

மூர்க்கத்தனமான செயல். மூர்க்கர்களைக் கொன்றாலும் தவறில்லை.


JAYACHANDRAN RAMAKRISHNAN
பிப் 19, 2025 13:09

இவர்களெல்லாம் நன்றாக இருக்க வேண்டும் வாழ்வில் வளம் பெற வேண்டும் என்பதற்காக தமிழக கனிம வளங்கள் கொடுத்து அங்கிருந்து மருத்துவ கழிவுகளை பணத்திற்காக இறக்குமதி செய்கிறோம் தமிழ் மொழியே போதும் வேறு மொழி வேண்டாம் என்னும் திராவிட மாடல். அவர்கள் கேரளாவில் மும்மொழி பயின்று ஹிந்தி பயின்று அரபு நாடுகளில் பணிபுரிந்து சம்பாதித்து தமிழக திருட்டு கனிம வளங்கள் வாங்கி பெரிய பெரிய வீடுகளாக கட்டி வளமுடன் வாழ்கிறார்கள். இதை ஏன் சொல்கிறேன் என்றால் நேற்று நமது மாண்புமிகு சீமான் சுந்தரம் அவர்கள் எதற்கு ஹிந்தி படிக்க வேண்டும் என்று பத்திரிகையாளர்களை பார்த்து கேட்டார். அதற்கு பதில் தான் இது. உருது ஹிந்தி உச்சரிப்பு அர்த்தம் இரண்டிலும் சிறு மாறுபாடு உண்டு. மற்றபடி உருது ஹிந்தி ஏறக்குறைய ஒரே மாதரி தான். ஆகவே ஹிந்தி தெரிந்தால் அரபு நாடுகளுக்கு வேலைக்கு சென்றால் நன்றாக சம்பாதிக்கலாம்.


Barakat Ali
பிப் 19, 2025 13:01

கேரளம், தமிழகம், மேற்குவங்கம் இவை மூன்றும் 2050 க்குள் இந்திய யூனியனில் இருந்து பிரிந்து தெற்கு பாகிஸ்தான், புதிய கிழக்கு பாகிஸ்தான் என்றெல்லாம் அழைக்கப்பட வாய்ப்பு.பாஜகவுக்கு நாட்டு நலனைவிட ஹிந்துக்களின் வாக்குவங்கி ஒன்றே குறி .....


ravi subramanian
பிப் 19, 2025 12:33

Suspension not the solution. Accused should be debarred and should not be given seat in all over India.


karthik
பிப் 19, 2025 12:29

100 சதம் படித்த மாநிலமாம்..


Barakat Ali
பிப் 19, 2025 12:58

100% கல்வியறிவு .....


SUBRAMANIAN P
பிப் 19, 2025 13:43

ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது..


முக்கிய வீடியோ