உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயிற்சி மையத்தில் தீ உயிர் தப்பிய மாணவர்கள்

பயிற்சி மையத்தில் தீ உயிர் தப்பிய மாணவர்கள்

பிரீத் விஹார்: கிழக்கு டில்லியின் பிரீத் விஹார் பகுதியில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. மாணவர்கள் சரியான நேரத்தில் கட்டடத்திலிருந்து வெளியேறியதால் உயிர் தப்பினர்.பிரீத் விஹார் பகுதியில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக, மதியம் 12:45 மணிக்கு தீயணைப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக நான்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.அதற்குள் கட்டடத்தில் இருந்து அனைத்து மாணவர்களும் தாங்களாகவே வெளியேறினர். பலர், கூரை மீது ஏறி, அருகில் உள்ள கட்டடங்களுக்கு தாவி உயிர் தப்பினர். தீ காரணமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.பிற்பகல் 2.25 மணியளவில் தீ முழுமையாக அணைக்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ