உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தங்கவயலில் தைப்பூச திருவிழா சுப்ரமணிய சுவாமி தேர்பவனி

தங்கவயலில் தைப்பூச திருவிழா சுப்ரமணிய சுவாமி தேர்பவனி

தங்கவயல்; 'அரோகரா' கோஷத்துடன் சுப்ரமணிய சுவாமி கோவிலில் தேர் பவனி நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமிக்கு பூஜைகள் செய்தனர்.ராபர்ட்சன் பேட்டை கணேஷ்புரத்தில் நேற்று தைப் பூசம் திருநாள் கொண்டாடப்பட்டது. காலை 6:00 மணி முதலே முருகப் பெருமானைப் போற்றி பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன. காலை 7:00 மணிக்கு மஹா அபிஷேகம், புஷ்ப அலங்காரம் செய்தனர். காலை 10:00 மணிக்கு இடும்பன் பூஜை செய்யப்பட்டது.மதியம் 12:00 மணிக்கு 108 தேங்காய்கள் உடைத்தனர். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமியை எழுந்தருள செய்து, தேரோட்டம் நடந்தது.ஏராளமான ஆண்களும், பெண்களும் அரோகரா கோஷமிட்டனர். 32 பம்பைகள், நாதஸ்வரம் முழங்க, தீபாராதனை செலுத்தினர். பம்பை ஒலியில் பலருக்கும் அருள் வந்து ஆடினர். கணேஷ் புரத்தில் உள்ளவர்கள் வீடுதோறும் தேங்காய் உடைத்து, சூடம் ஏற்றி சுவாமியை வழிபட்டனர். பகல் 1:30 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ